»   »  ரஜினியும் அவரது மகள்களும்!... சில சுவாரஸ்யங்கள்!!

ரஜினியும் அவரது மகள்களும்!... சில சுவாரஸ்யங்கள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

40 வயதிலேயே சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல், டீன் ஏஜ் பெண்ணிற்கு அப்பா என ஸ்டைலாக நடித்து அசத்தியிருப்பார் ரஜினி.
நல்லவனுக்கு நல்லவனில் ராதிகா ஜோடியாக நடித்தாலும் துளசிக்கு பாசமான அப்பாவாக அசத்தியிருப்பார். அதேபோல அண்ணாமலை, படையப்பா ஆகிய திரைப்படங்களிலும் டீன் ஏஜ் வயதுடைய பெண்களின் பாசமான தந்தையாக நடித்திருப்பார் ரஜினி.

இந்த மூன்று படங்களிலுமே தனக்கு பிடிக்காத எதிரியின் மகன்களை காதலிப்பார்கள் ரஜினியின் மகள்கள். இந்த படங்களுக்குப் பிறகு 60 வயதிலும் திருமணத்திற்கு பெண் தேடுபவராக சிவாஜி படத்தில் நடித்திருப்பார். எந்திரனில் ஐஸ்வர்யா உடன் டூயட் பாடுவார். லிங்காவில் சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா என இரண்டு நாயகிகளுடன் டூயட் பாடிய ரஜினி தன்னுடைய அடுத்த படத்தில் மீண்டும் டீன் ஏஜ் பெண்ணிற்கு தந்தையாக நடிக்கிறார். மகள்கள் தினத்தை முன்னிட்டு பாசமான ரஜினியைப் பற்றியும் அவரது மகள்களாக நடித்த நாயகிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்களேன்.

இளமை முதுமை

இளமை முதுமை

நல்லவனுக்க நல்லவன், அண்ணாமலை, படையப்பா, ஆகிய படங்களில் ரஜினி இளமை, முதுமை, என அசத்தியிருப்பார். இளமை வயதில் வேகமான ரஜினியாகவும், முதுமை வயதில் பொறுப்பான, பாசமான அப்பாவாக வலம் வருவார்.

துளசி

துளசி

நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினியின் மகளாக நடித்தவர் துளசி. இன்றைக்கு துளசியைப் பார்த்தால் ரஜினியின் அம்மாவாக நடிக்கும் அளவிற்கு குண்டாக இருக்கிறார். அவரே இப்போது கதாநாயகிகளின் அம்மாவாகத்தான் சினிமாக்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மகள் போன சோகம்

தன்னை எதிரியாக நினைக்கும் ஒருவரை தன்னுடைய மகள் காதலிப்பது அறிந்து மகளுக்கு அறிவுரை கூறுவார் ரஜினி. ஆனால் அதையும் மீறி மகள் திருமணம் செய்துவதை நினைத்து சோக கீதம் பாடும் ரஜினியின் நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்தமானது.

அண்ணாமலையில் தாட்சாயிணி

அண்ணாமலை படத்தில் நண்பனாக இருந்து எதிரியான சரத்பாபுவின் மகனை காதலிப்பார் மகளாக நடித்த தாட்சாயிணி. மகளுக்கு அட்வைஸ் செய்யும் அந்த காட்சியில் அசத்தியிருப்பார் ரஜினி.

படையப்பா படத்தில் ப்ரீதா

படையப்பா படத்தில் ப்ரீதா

படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணன், சௌந்தர்யா என இருவர் நாயகிகள் ரஜினியை காதலித்தாலும் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொள்வார் ரஜினி. இதற்கு பழிவாங்க ரஜினியின் மகளான ப்ரீதாவை தன்னுடைய அண்ணன் மகனான அப்பாஸை விட்டு காதலிக்க வைத்து சிக்கலை உண்டு பண்ணுவார் ரம்யா கிருஷ்ணன்.

அப்பா சொன்னா ஓகேதான்

அப்பா சொன்னா ஓகேதான்

ஒரு மகள் காதலில் விழுந்தாலும் இன்னொரு மகள் அப்பாவின் சொல் பேச்சு கேட்டு மாமன் மகளையே திருமணம் செய்து கொள்வார். அப்புறம் சிக்ஸ் பேக் காட்டி சண்டை போட்டு மகளின் காதலை சேர்த்து வைப்பார் ரஜினி

தன்ஷிகா

தன்ஷிகா

ரஞ்சித் இயக்கத்தில் 159வது படத்தில் ரஜினியின் மகளாக தன்ஷிகா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட வருடங்களுக்குப் பிறகு டீன் ஏஜ் மகளின் அப்பாவாக மீண்டும் நடிக்கப் போகிறார் ரஜினி. சென்டிமெண்ட் ஆக இந்தப்படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று பேசப்படுகிறது. ஆனால் மகளாக நடித்தால் எதிர்காலம் என்னவாகும் என்ற சென்டிமெண்டும் கோலிவுட்டை வலம் வருகிறது.

English summary
As we had reported earlier superstar Rajinikanth will play a role close to his real life age in his next film to be directed by Ranjith. It is being speculated that the film will showcase Rajini as a aged done who still rules the underworld. Now hear from a source in Kollywood that the character played by Rajini will have an adult daughter in the yet to be titled film and the team is on the search for a star face to play that role.
Please Wait while comments are loading...