twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல் பிரவேசம்... விமர்சகர்களுக்கு ரஜினி கொடுத்த நெத்தியடி பதில்!

    By Shankar
    |

    தனது அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது விமர்சகர்கள் சொல்லி வரும் கருத்துக்களுக்கு நெத்தியடியாக இன்று பதில் தந்துள்ளார் ரஜினிகாந்த்.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் வரும் மே 19-ம் தேதி வரை தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Rajinikanth's fitting reply to haters

    இன்று முதல் நாள். நிகழ்ச்சி தொடங்கும் முன் ரசிகர்களிடம் ரஜினி உரையாற்றினார். எந்த வித டென்ஷன், பதட்டம் இல்லாமல் மிக இயல்பாக, அதே நேரம் அழுத்தமாக அமைந்திருந்தது அவரது பேச்சு. அதுமட்டுமல்ல, இதுவரை இல்லாத அளவுக்கு ஓரளவு வெளிப்படையாகவே தனது அரசியல் பிரவேசம், அது குறித்த எதிர்ப்பாளர்களின் கருத்துக்கள் பற்றியெல்லாம் பேசிவிட்டார்.

    படத்தின் வெற்றிக்காகவா?

    கடந்த 22 ஆண்டுகளாக ரஜினி மீது விமர்சகர்கள் கூறி வரும் குற்றச்சாட்டு, "ரஜினி தன் படம் வெளியாகும் போதுதான், அந்தப் படத்தின் வெற்றிக்காக எதையாவது பரபரப்பாக செய்வார்...' என்பது. இன்றைய பேச்சில், அதைக் குறிப்பிட்ட ரஜினி, 'நான் அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படிப்பட்ட நிலையிலும் இல்லை. தமிழ் மக்கள் அந்த அளவு ஏமாளிகள் இல்லை. அவர்கள் ஒரே ஒரு விஷயத்தில்தான் ஏமாறுகிறார்கள்... விடுங்க அதைப்பற்றி நான் இப்போது பேச மாட்டேன்," என்றார்.

    அரசியலுக்கு வராதது ஏன்?

    தான் அரசியலுக்கு வராதது குறித்த கருத்துக்களுக்கு அவரது பதில், "நான் எப்போதும் இறைவனின் ஒரு கருவியாகத்தான் இருக்கிறேன். இன்று நான் நடிகன். நாளை நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதை இறைவன் முடிவு செய்வான். இன்று ஒரு நடிகனாக எப்படி உண்மையாக, நேர்மையாக இருப்பேனோ, அப்படித்தான் நாளை வேறு எந்த பொறுப்புக்கு வந்தாலும் இருப்பேன்," என்றார்.

    அரசியல் பதவியை வைத்து பணம் சம்பாதிக்க நினைச்சா...

    ரஜினி ரசிகர்களின் அரசியல் ஆசை, அவர்கள் அரசியலில் பணம் பார்த்த விதம் குறித்தெல்லாம் ரொம்ப காலமாகவே ரஜினிக்குத் தெரியும். அதை முதல் முறையாக இன்று போட்டு உடைத்துவிட்டார்.

    "1996-ல் நான் எடுத்த ஒரு அரசியல் முடிவு... அதை அரசியல் விபத்துன்னுதான் சொல்லணும், அன்றைக்கு ஒரு கூட்டணியை ஆதரிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியது. என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்கள் நான் ஆதரித்த அணியை ஆட்சியமைக்க வைத்தனர்.

    அன்றைய என்னுடைய முடிவு, ரசிகர்களை அரசியல்வாதிகளை பயன்படுத்தக் காரணமானது. அதேபோல ரசிகர்கள் சிலரும் அரசியல்வாதிகளைப் பயன்படுத்தி பெரும் பணம் சம்பாதித்தனர். அதிலிருந்து ருசி கண்ட பூனையாகிவிட்டனர். எனக்கே பல ரசிகர்கள் கடிதம் எழுதி, 'நமக்கு பின்னாடி வந்தவங்கள்லாம் வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கிட்டு பதவிகளைப் பிடிச்சிட்டாங்க. நாம எப்ப கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி ஆகறது'ன்னு கேட்டிருந்தாங்க. ஆகலாம். ஆசையில் தப்பில்ல. ஆனா அரசியல் என்பது பணம் சம்பாதிக்க அல்ல. நாளை நான் எப்படி இருப்பேன் என்பதை இறைவன் தீர்மானிப்பார். ஒருவேளை நாளை அப்படி ஒரு பொறுப்புக்கு நான் வரும்போது, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இருப்பவர்களை உள்ளேயே விட மாட்டேன்," என்று தன் ரசிகர்களுக்கு கடுமையான எச்சரிக்கைக் கொடுத்தார் ரஜினி.

    இதுவரை இத்தனை வெளிப்படையாக அவர் தன் ரசிகர்களிடம் அரசியல் பேசியதில்லை.

    ரஜினி ஒரு குழப்பவாதி, தெளிவாக முடிவெடுக்க மாட்டார்... எதிலும் ஸ்திரமான நிலைப்பாடு அவருக்கு இல்லை என்ற விமர்சனங்களுக்கு அவர் பதில்...

    "தண்ணில கால் வைக்கப் போறோம். வைத்த பிறகுதான் உள்ள ஏகப்பட்ட முதலைகள் இருப்பது தெரிகிறது. உடனே முன் வச்ச காலை பின்னே எடுக்க மாட்டேன் என்ற முரட்டுத் துணிச்சலோடு தொடர்வது புத்திசாலித்தனமா? அப்படி ஒரு முரட்டுத் துணிச்சல் எனக்கில்லை. சந்தர்ப்ப சூழல் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும்."

    English summary
    Today Rajinikanth has gave a fitting reply to all his criticisers those continuously commented on his political stand.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X