ரஜினியின் சொத்து மதிப்பு, வருமானம் எவ்வளவு தெரியுமா ?... அறியாத தகவல்கள் இதோ
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் 1950 ம் ஆண்டு டிசம்பர் 12 ம் தேதி கர்நாடகாவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கேய்க்வாட். ரஜினியின் தாய்மொழி மராத்தி. ரஜினி 1975 ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்தார்.
Recommended Video
கடந்த 46 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் 170 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஆனால் இதுவரை தனது தாய்மொழியான மராத்தியில் ரஜினி ஒரு படம் கூட நடித்ததில்லை.
பஸ் கண்டக்டராக தனது வாழ்க்கையை துவக்கிய ரஜினிகாந்த், படிப்படியாக வளர்ந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை தலைவர் என கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் சொத்து மதிப்பு, வருமானம் உள்ளிட்ட பலரும் அறியாத தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரஜினியின் சம்பளம்
ரஜினி ஒரு படத்திற்கு ரூ.50 கோடி வரை சம்பளம் பெறுகிறார். எவரும் விளம்பரப்படுத்த தேவையில்லாத தனி பிராண்டாக உருவெடுத்திருப்பவர் ரஜினி. அதனால் இவரது படங்களுக்கோ, இவருக்கோ தனியாக விளம்பரம் செய்யப்படுவதில்லை. ரஜினியின் பெயருக்காகவே ஓடி சூப்பர் ஹிட்டாகி, வசூலை குவித்த படங்கள் ஏராளம்.

ரஜினியின் சொத்து மதிப்பு
2021 ம் ஆண்டு நிலவரப்படி ரஜினியின் மொத்த சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.365 கோடி. ரஜினி தான் நடத்தும் அறக்கட்டளை மற்றும் பலருக்கு உதவி செய்வதற்காக ஏராளமான தொகையை செலவிட்டு வருகிறார். இதுவரை சினிமா வட்டாரங்களில் கிடைத்த தகவலின்படி, தான் நடித்த ஏதாவது ஒரு படம் ஓடவில்லை என்றால், அந்த நஷ்டத்தை சரி செய்வதற்காக தான் வாங்கிய சம்பள பணத்தை தயாரிப்பு நிறுவனத்திடமே ரஜினி திரும்ப கொடுத்து விடுவாராம்.

ரஜினியின் சொத்து விபரம்
நாட்டிலேயே அதிகமானவர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ரஜினிகாந்த்தும் ஒருவர். இவருக்கு சென்னை போயஸ் கார்டன் பகுதியில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டை 2002 ம் ஆண்டு ரஜினி கட்டினார். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.35 முதல் 40 கோடி ஆகும்.

எத்தனை கார் வைத்திருக்கிறார்
மற்ற நடிகர்களைப் போல் ரஜினியிடம் 10 கார்கள் கிடையாது. மூன்று சொகுசு கார்கள் மட்டுமே உள்ளது. இதை அவரது தேவைகளுக்காக மட்டுமே ரஜினி பயன்படுத்தி வருகிறார். Toyota Innova, Range Rover, Bentley ஆகிய மாடல் கார்களை ரஜினி வைத்துள்ளார்.

எவ்வளவு முதலீடு
ரஜினிகாந்த் தற்போது சொத்து மதிப்புபடி ரூ.100 முதல் ரூ.120 கோடிகளை முதலீடு செய்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி திரைக்கதை, பின்னணி பாடுவது, திரைப்பட தயாரிப்பாளர் என்ற முறையிலும் ரஜினிக்கு வருமானம் வருகிறது. ரஜினிக்கு மாதத்திற்கு ரூ.3 கோடி வரை வருமானம் வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











