twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ரஜினிகாந்த்'துக்கு வயசு 36!

    By Shankar
    |

    Rajini
    சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க வந்து கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதியுடன் 36 வருடங்கள் ஆகின்றன. இந்த மறக்க முடியாத நாளில் அவர் என்ன செய்தார் தெரியுமா... தனது அபூர்வ ராகங்கள் படத்தை டிவியில் குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.

    படம் நடிக்கத் தொடங்கியதிலிருந்து, படம் ரிலீஸாகி அதை நண்பர்களுடன் பார்த்தது வரை நடந்த நிகழ்ச்சிகளை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டாராம்.

    கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய சிவாஜி ராவ் கெய்க்வாட், நண்பர்கள் உதவியுடன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புப் பயிற்சி பெற்றார்.

    படிக்கும்போதே, கேபி எனப் புகழப்பட்ட கே பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது அவருக்கு. படித்து முடித்து சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது, ரஜினியை அழைத்தார் பாலச்சந்தர்.

    சினிமாவில் ஏற்கெனவே நடிகர் திலகம் சிவாஜி கோலோச்சிக் கொண்டிருந்த நேரம், சிவாஜி ராவ் எனும் பெயரில் நடிக்க வந்தால், எடுபடாமல் போகும் என்பதால், ரசிகர்களை கவரும் விதத்தில் அவரது பெயரை மாற்ற விரும்பினார் பாலசந்தர்.

    தீவிர ஆலோசனைக்கு பிறகு ஒரு ஹோலி பண்டிகை அன்று சிவாஜி ராவ், 'ரஜினிகாந்த்' ஆனார். ரஜினி நடித்த 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி வெளியானது. அதிலிருந்து 'ரஜினிகாந்த்' என்ற பெயரில் புகழடையத் தொடங்கினார் ரஜினி.

    நேற்றுடன் அந்த படம், வெளியாகி 36 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.

    தற்போது உடல்நிலை தேறி, போயஸ்கார்டனிலும் மகள் ஐஸ்வர்யாவின் வீனஸ் காலனி வீட்டிலும் ஓய்விலிருக்கும் ரஜினி, இந்த நாளை மறக்காமல் தனது குடும்பத்தினருடன் மிக எளிமையாகக் கொண்டாடினார். கொண்டாட்டமென்றால், எதுவும் விசேஷமாக இல்லை.

    அபூர்வராகங்கள் படம் பார்த்தபடி, தனது பழைய நினைவுகளை மகள்கள், மனைவி, மருமகன்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாராம்.

    பொன்விழாவும் காண வாழ்த்துக்கள் ரஜினி சார்!

    English summary
    18th August marks 36 years completion of Superstar Rajinikanth in Tamil Cinema! It is on the same day in 1975, Superstar’s debut movie Apoorva Ragangal hit the silver screens. Since then Rajini is been a phenomenon in Tamil Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X