»   »  'அடை மழை.. மக்களுக்கு ரொம்ப சங்கடம்... பப்ளிசிட்டியே இல்லாம நாம ஏதாவது பண்ணனும்!' - ரஜினி

'அடை மழை.. மக்களுக்கு ரொம்ப சங்கடம்... பப்ளிசிட்டியே இல்லாம நாம ஏதாவது பண்ணனும்!' - ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடை மழை, பெரும் வெள்ளம் என தண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மக்களுக்கு நாம ஏதாவது செஞ்சே ஆகணும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மலேசியா சென்று ரஜினியைச் சந்தித்துவிட்டுத் திரும்பினார் ‘கராத்தே' தியாகராஜன்.

மலேசியாவில் சந்திப்பு

மலேசியாவில் சந்திப்பு

ரஜினியைச் சந்தித்தபோது தமிழகத்தில் மழை பாதிப்பு குறித்து ரஜினி தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டாராம்.

கராத்தே தியாகராஜன் பேட்டி

கராத்தே தியாகராஜன் பேட்டி

இதுகுறித்து கராத்தே தியாகராஜன் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், "ரஜினி சார் எப்பவும் மனசுல பட்டதை பட் படீர்னு பேசுவார். ஜெயா டி.வி. நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டு, அங்கே முதல்வர் ஜெயலலிதாவை வைச்சுக்கிட்டே கருணாநிதியைப் பாராட்டிப் பேசுற துணிச்சல் அவருக்கு மட்டுமே உண்டு. அப்படிப்பட்டவருக்கு தமிழக மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே உண்டு. ஆனால், அதுக்கு அரசியல்தான் ஒரே வழியான்னு எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

மழை வெள்ளம் பற்றி கேட்ட ரஜினி

மழை வெள்ளம் பற்றி கேட்ட ரஜினி

அரசியலில் இல்லாவிட்டாலும் மக்கள் நலன் சம்பந்தமான விஷயங்களில் கவனம் பதித்தே இருக்கிறார். இப்போது சென்னை வெள்ளம் குறித்து கூட பல தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டே இருக்கிறார்.

வருத்தம்

வருத்தம்

பல வருடங்களுக்குப் பிறகும் எப்போதும் இல்லாத அளவுக்கு சென்னை, வெள்ளத்தில் தத்தளிப்பது அவரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பப்ளிசிட்டியே இல்லாம...

பப்ளிசிட்டியே இல்லாம...

'ரொம்ப கஷ்டம்ல...! ப்ச்... அடை மழை, டிராஃபிக், வெள்ளம்னு ஒவ்வொரு நிமிஷமும் சங்கடம்ல. நாம இந்த மக்களுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும். என்ன பண்ணலாம்னு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க. பப்ளிசிட்டியே இல்லாம செஞ்சுரணும்' என்று என்னிடம் சொன்னார்.

ஏதாவது பண்ணுவார்!

ஏதாவது பண்ணுவார்!

என்னிடம் மட்டுமில்லாமல் இந்த யோசனையை தன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் பலரிடமும் கேட்டிருக்கார். நிச்சயம் அவர் ஏதாவது பண்ணுவார்," என்றார்.

English summary
Congress leader Karate Thiagarajan says that actor Rajinikanth wants to do something for flood affected Tamil people.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil