»   »  நவம்பர் முதல் வாரம் சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்!

நவம்பர் முதல் வாரம் சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஓய்வு மற்றும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நவம்பர் முதல் வாரம் சென்னை திரும்புகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்கா சென்றார்.

Rajinikanth will return home at Nov 1st week

'கபாலி', '2.0' ஆகிய படங்களின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்த ரஜினிகாந்துக்கு கடந்த மே மாதம் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு சில மருத்து சோதனைகளும் நடந்தன.

இதையடுத்து '2.0' படத்தில் அவரது காட்சிகளைத் தவிர்த்து மற்றவர்கள் நடிக்கும் காட்சிகளை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் '2.0' படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற அவர், முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்றவர் துபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளார்.

ரஜினிகாந்துடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷும் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடக்கும் எனக் கூறப்படுகிறது.

அனைத்து பரிசோதனைகளையும் முடித்துக் கொண்டு நவம்பர் முதல் வாரம் ரஜினி சென்னை திரும்புகிறார்.

English summary
Rajinikanth, who is now in the US will return home at November 1st week after finished all his tests.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil