74 வயதிலும் சூப்பர் ஸ்டார் ஆட்டம்.. தரமான சம்பவம்.. வெளியானது கூலி ‘சிக்கிடு’ பாடல் வீடியோ!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்க்த்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ந் நடித்த கூலி திரைப்படம் அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினிகாந்தின் ஓபனிங் பாடலான சிக்கிடு பாடல் வீடியோவை சற்றுமுன் சன் டிவி யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர்.
வழக்கமாக ரஜினிகாந்துக்கு ஓபனிங் பாடல் என்றாலே எஸ்.பி. பாலசுப்ரமணியம் அல்லது மலேசியா வாசுதேவன் பாடுவார்கள். அவர்கள் இருவரும் மறைந்த நிலையில், அனிருத் இந்த முறை ரஜினிகாந்துக்காக குரல் கொடுத்து பாடியுள்ளார்.

அவருடன் கூடவே டி. ராஜேந்திரரும் களமிறங்கி வைப் ஏத்தியுள்ளார். தியேட்டர்களிலேயே மோனிகா பாடலும் இந்த சிக்கிடு பாடலும் தான் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தன. இந்நிலையில், யூடியூபில் வேறலெவல் டிரெண்டிங்கை இந்த பாடல் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியானது சிக்கிடு பாடல்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேவாவாக கூலி படத்தில் நடித்த நிலையில், தேவா மேன்ஷனில் நடைபெறும் ரஜினிகாந்த் இன்ட்ரோ பாடலான சிக்கிடு பாடல் வெளியாகி உள்ளது. மேன்ஷன் டேவை கொண்டாட எல்லாரும் ஒளித்து வைத்திருக்கும் சரக்கை ஒரு அண்டாவில் ஊற்றி ரஜினிகாந்த் அதை எட்டி உதைத்துக் கொட்டும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
74 வயதிலும் எனர்ஜியான ஆட்டம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை கடந்து விட்டார். தனது 74 வயதிலும் இவ்வளவு எனர்ஜியுடன் அவர் நடனமாடுவதும் சண்டைக் காட்சிகளில் சண்டையிடுவதும் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையையே பிரமிப்பில் ஆழ்த்துகிறது. மோனிகா பாடலிலும் ஒரு ரெண்டு ஸ்டெப் பூஜா ஹெக்டேவுடன் ரஜினிகாந்தை ஆட வைத்திருக்கலாம் என்றே ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.
அடுத்த வாரம் அமேசான் பிரைமில்: கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான கூலி திரைப்படம் அடுத்த வாரம் செப்டம்பர் 11ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், தொடர்ந்து ரஜினிகாந்த் கூலி படத்திற்காக சண்டையிட்ட மேக்கிங் வீடியோ, பாடல்கள் என வரிசையாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வருகிறது. ஓடிடியிலும் ஏகப்பட்ட ரசிகர்களை கூலி படம் உலகளவில் ஈர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











