முதல் நாள் லியோ.. 2வது நாள் குட் பேட் அக்லி லைஃப் டைம் வசூலையே காலி பண்ண கூலி.. தலைவரு நிரந்தரம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 50வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடி வரும் நிலையில், அதனை முன்னிட்டு வெளியாகி உள்ள கூலி திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளை பார்த்து வருகின்றனர். ஒரு பக்கம் தலைவர் ரசிகர்கள் படம் எப்படி இருந்தாலும் பார்ப்போம் என பார்க்க, இன்னொரு பக்கம் ட்ரோல் வீடியோக்களை போடலாம் என்கிற நோக்கத்தில் ஹேட்டர்களும் டிக்கெட்டுகளை புக் செய்து பார்த்து வருகின்றனர்.

எப்படியோ சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கல்லா கட்டினால் போதும். லியோவை விட கூலி படத்தின் வசூல் அதிகரித்து விட்டால், அதற்கு ஏற்ப 50 கோடி சம்பளத்தில் இருந்து 60 கோடி ரூபாயாக தனது சம்பளத்தை லோகேஷ் கனகராஜ் உயர்த்திவிடுவார் என்கின்றனர்.

Rajinikanth s Coolie movie shatters Ajith Kumar s Good Bad Ugly life time within just 2 days
Photo Credit:

கூலி திரைப்படம் முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், 4 நாட்களிலும் மொத்த வசூலையும் அள்ளி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துவிடும் என்பது உறுதியாகி உள்ளது.

இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்கள்: அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் 136 கோடி வசூலை உலகளவில் எடுத்ததாக தகவல்கள் வெளியாகின. சூர்யாவின் ரெட்ரோ, நான் தியேட்டரிக்கல் வசூலை சேர்த்து 235 கோடி ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டிராகன் திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூலை அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தக் லைஃப் திரைப்படம் அதிகபட்சமாக 97 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் தான் இந்த ஆண்டு இதுவரை 247 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் கடைசியாக அதிகாரப்பூர்வ வசூல் என 200 கோடி போஸ்டரை மட்டுமே வெளியிட்டது.

குட் பேட் அக்லி லைஃப் டைம் காலி: இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், செளபின் சாஹீர், நித்யா ராம் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் முதல் நாளில் 151 கோடி ரூபாய் வசூல் செய்து லியோ படத்தின் ஓபனிங் வசூல் சாதனையை முறியடித்த நிலையில், 2வது நாளில் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் லைஃப் டைம் வசூலையே முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக 250 கோடி ரூபாய் வசூலை கூலி திரைப்படம் வசூல் செய்திருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீக்கெண்டோட விக்ரம் க்ளோஸ்: மேலும், முதல் வார இறுதிக்குள் விக்ரம் படத்தின் லைஃப் டைம் வசூலையும் கூலி பீட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் மற்றும் லியோ படங்களின் வசூலை கூலி முந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 1000 கோடி வசூலை இந்த படம் அடைவது ரொம்பவே கஷ்டம் தான் என்கின்றனர். இந்தி பெல்ட்டில் அமீர்கான் நடித்தும் கூலி படத்துக்கு பெரிதாக ஓபனிங் இல்லை மற்றும் வார் 2 படத்தின் கிளாஷ் தான் காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X