முடிச்சிடலாமா?.. எண்ணி 7 நாள் பாட்ஷா ஸ்டைலில் லியோ லைஃப் டைமை காலி பண்ணுவாரா ‘கூலி’ ரஜினி.. 2.0?

சென்னை: சன் பிக்சர்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுத்துவிட்டு லைகா போல புலம்பித் தவிக்க வாய்ப்பே இல்லை என்பதை கூலி படமும் நிரூபித்துள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அடுத்த படம் போலவே கூலி உள்ளது. இடையே லால் சலாம், வேட்டையன் படங்கள் கை கொடுக்கவில்லை என்றாலும், லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் காம்போவுக்கு ரசிகர்கள் முதல் 4 நாட்கள் முன்கூட்டியே அரெஸ்ட் ஆகிவிட்டனர்.

கூலி படம் தமிழ்நாட்டில் வெளியாவதற்கு முன்பே அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் நெகட்டிவ் விமர்சனங்கள் பரவத் தொடங்கின. ரஜினி ஹேட்டர்கள் ஓவர்டைம் பார்த்து கூலி படத்தை வசூல் ரீதியாகவும் முடக்க போட்ட முயற்சிகள் அனைத்தும் முட்டுச்சந்தில் முட்டிக் கொண்டு நிற்கின்றன.

Rajinikanth s Coolie will soon overtakes Vijay s Leo Lifetime Collection at Box Office
Photo Credit:

பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா 74 வயதிலும் நான் தான்டா என ஆணித்தரமாக அடித்டு சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். முதல் 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது கூலி. பார்க்கிங், பாப்கார்ன், ஸ்நாக்ஸ் கணக்கு எல்லாம் எண்ணிப் பார்த்தால் எங்கேயோ போய்விடும்.

5 நாள் வசூல் இத்தனை கோடியா?: 4 நாட்களில் கூலி திரைப்படம் 404 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டியுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு பலரை கதற விட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வெளியான எந்தவொரு முன்னணி நடிகரின் படமும் இந்தளவுக்கு வசூல் சாதனை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 5 நாட்களில் அதிகபட்சமாக 206 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு இருக்கும் ரசிகர்கள் படை இந்த கூலியை கோடீஸ்வரனாக மாற்றியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை என்கின்றனர். 5 நாட்களில் கூலி திரைப்படம் உலகளவில் 450 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth s Coolie will soon overtakes Vijay s Leo Lifetime Collection at Box Office
Photo Credit:

7 நாளில் லியோவை முடிச்சிடலாமா?: 2023ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் மற்றும் லியோ என 2 பெரிய படங்கள் 600 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிக் கொடுத்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லியோவின் கடைசி அதிகாரப்பூர்வ வசூல் போஸ்டராக 540 கோடி வசூலை 12 நாட்களில் அள்ளியதாக போஸ்டரை படக்குழு வெளியிட்டது. ரஜினிகாந்தின் ஜெயிலர் வசூலை லியோ முந்திவிட்டதாக விஜய் ரசிகர்கள் கூறி வந்த நிலையில், கூலி திரைப்படம் எண்ணி 7 நாட்களில் லியோ வசூலை பாட்ஷா ஸ்டைலில் முறியடித்து விடும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட பதிவுகளை போட்டு வருகின்றனர். இதே வேகத்தில் கூலி படம் ஓடினால் அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆனால், வார நாட்களில் கூலி படத்தின் வசூல் வேகம் குறைந்தால் 2வது வார முடிவில் கண்டிப்பாக ஜெயிலர் மற்றும் லியோ படங்களின் லைஃப் டைம் வசூலை கூலி முறியடித்துவிடும் என்கின்றனர்.

2.0 வசூலை தாண்டுமா?: கூலி திரைப்படம் 1000 கோடி வசூலை அள்ளுமா? ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 வசூலை தாண்டுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. கூலி படத்தின் வசூல் எப்படி இருந்தாலும் இந்த ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக 4 நாட்களில் கூலி படம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து விஜய் நடிப்பில் வரும் ஜனநாயகன் படத்தின் வசூல் கூலி படத்தின் வசூலை முந்துமா? என்கிற போட்டியும் கண்டிப்பா இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X