»   »  ரஜினிமுருகன்... மாஸ்தான்யா... சிவகார்த்திக்கேயனுக்கு குவியும் வாழ்த்து

ரஜினிமுருகன்... மாஸ்தான்யா... சிவகார்த்திக்கேயனுக்கு குவியும் வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம் குழு வின் அடுத்த படைப்பு ரஜினி முருகன். மீண்டும் ஒரு அழகான கதாநாயகியோடு இணைந்திருக்கிறார் சிவகார்த்திக்கேயன். காமெடிக்கு அதே லந்து கூட்டணி சூரி. கூடவே ஏழரை என்ற அடைமொழியோடு வரும் சமுத்திரகனி... படத்தின் ட்ரெயிலர் பட்டையைக் கிளப்புகிறது.

ரஜினி முருகன் படத்தின் ட்ரெயிலரைப் பார்த்து தனுஷ், இயக்குநர் சீனு ராமசாமி, டிவி தொகுப்பாளினி திவ்யதர்சினி ஆகியோர் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திக்கேயனுக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


அழகு கீர்த்தி

அழகு கீர்த்தி

டிரெயிலரில் சிவகார்த்திக்கேயன், சூரியின் ஆதிக்கம் இருந்தாலும் கீர்த்தி சுரேஷின் அழகு ஆக்கிரமித்துக் கொள்கிறது.


தனுஷ் வாழ்த்து

சிவகார்த்திக்கேயன் தனுஷ் இடையே புகைச்சல் என்றெல்லாம் வதந்தியை கிளப்பிவிட சிலர் இருக்க இங்கேயோ டிரெயிலரைப் பார்த்து முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார் தனுஷ். வாழ்த்துக்கு நன்றி கூறியுள்ளார் சிவகார்த்திக்கேயன்.


பொன்ராமுக்கு வாழ்த்து

இயக்குநர் சீனு ராமசாமி தனது பதிவில் ரஜினி முருகன் பட இயக்குநர் பொன்ராமுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.


உடன்பிறப்பே

டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினியோ, இந்த ட்ரெயிலர் நிச்சயம் ஹிட்டு உடன்பிறப்பே என்ற கூறியுள்ளார். அதற்கு நன்றி உடன்பிறப்பே என்று பதிவிட்டுள்ளார் சிவகார்த்திக்கேயன்.


எல்லோருக்கும் நன்றி

டுவிட்டரில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டவர்களுக்கும், நேரில் வாழ்த்துக்கூறிய ரசிகர்கள், அபிமானிகளுக்கு நன்றியைப் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திக்கேயன்.


நம்பி வாங்க

நம்பி வாங்க

ஒவ்வொரு காட்சியிலும் இளமை, புதுமை, கலர்ஃபுல் என படம் பார்ப்பவர்களுக்கு ஒரு உற்சாகத்தை அளித்துள்ளார் பொன்ராஜ். அதை உணர்த்தும் வகையில் நம்பி வாங்க... சந்தோசமா போங்க என்று டிரெயிலரில் முடித்துள்ளார்.


English summary
The trailer of Sivakarthikeyan starrer Rajinimurugan in Ponram's direction has been released for the fans. The rib tickling family entertainer has music composed by D.Imman and has Keerthy Suresh playing the female lead.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil