»   »  ராஜ்கிரணுக்கு குவியும் வாய்ப்புகள்... கொம்பனில் முக்கிய வேடம்!

ராஜ்கிரணுக்கு குவியும் வாய்ப்புகள்... கொம்பனில் முக்கிய வேடம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரண்மனைக் கிளி படம் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நேரம்... ராஜ்கிரண்தான் அன்றைக்கு தமிழ் சினிமாவின் அதிகம் தேவைப்பட்ட ஹீரோ.

ஆனால் அன்றைக்கு அவர் பேசிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்குவதை விட ஒரு ரூபாய் அதிகம் வேண்டும் என்பதுதான். நம்ப மாட்டீர்கள்.. தயாரிப்பாளர்களும் மறுபேச்சின்றி கொடுத்தார்கள்!!

மதிப்பு

மதிப்பு

அதே ராஜ்கிரண் மாணிக்கம் என்ற ஒரு படத்தில் திடீரென சறுக்கி, கொஞ்ச காலம் காணாமல் போனார். நிஜத்தில் அவர் சில சர்ச்சைகளில் சிக்கினாலும் தன் மீதான மதிப்பு குறையாமல் பார்த்துக் கொண்டார் சினிமாவில்.

நந்தா

நந்தா

அவரது மறுபிரவேசம் நந்தாவில் ஆரம்பித்தது. சிவாஜி கணேசன் நடிக்க வேண்டிய பாத்திரம். அதை அத்தனை சிறப்பாக நடித்திருந்தார் ராஜ்கிரண். பாலாவுக்கு வேலையே வைக்காமல், அத்தனை கச்சிதமான நடிப்பைத் தந்தார்.

தேர்ந்தெடுத்த பாத்திரங்கள்

தேர்ந்தெடுத்த பாத்திரங்கள்

அடுத்து தலைமுறைகள், முனி, தவமாய் தவமிருந்து, சண்டைக்கோழி என அவர் நடித்த அத்தனைப் படங்களிலும், ஹீரோ யாராக இருந்தாலும் அவரே பிரதானமாய் நின்றார். அத்தனை அற்புதமான, இயல்பான நடிப்பைத் தருபவர் ராஜ்கிரண்.

மஞ்சப்பை

மஞ்சப்பை

சமீபத்தில் அவர் நடித்த மஞ்சப்பை வெளியானது. ஹீரோ, ஹீரோயின் யாரும் இந்தப் படத்தில் எடுபடவில்லை. ஆனால் ராஜ்கிரண் ஒற்றை ஆளாய் அந்தப் படத்தை தாங்குகிறார்.

குவியும் வாய்ப்புகள்

குவியும் வாய்ப்புகள்

இன்றைக்கும் ராஜ்கிரண்தான் அதிகம் தேவைப்படும் நடிகராகத் திகழ்கிறார். அடுத்து அவர் நடிப்பில் வரவிருக்கும் படம் சிவப்பு.

இந்தப் படத்துக்குப் பிறகு, கார்த்தியுடன் கொம்பன், சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் என பல படங்களில் அவருக்கு பிரதான வேடங்கள். இன்னும் பலர் அவரை ஒப்பந்தம் செய்ய வந்தாலும், ராஜ்கிரண் அவசரப்படாமல் போய் வரச் சொல்கிறார்.

நெகடிவா நடிக்க மாட்டேன்

நெகடிவா நடிக்க மாட்டேன்

ராஜ்கிரணின் இன்னொரு ஸ்பெஷல்... அவர் தான் நடிக்கும் எந்தப் படத்திலும் எதிர்மறை வேடங்களில் நடிக்கவே மாட்டேன் என்ற கொள்கையுடன் இருப்பதுதான். அப்படி அவர் வேண்டாம் என மறுத்ததுதான் சிவாஜி - த பாஸ் படத்தில் சுமன் நடித்த ஆதி பாத்திரம்!

English summary
Rajkiran becomes the most wanted actor in Kollywood now, after Manjappai success.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos