»   »  காது, மூக்கு தொண்டை, ஆக்ஷன்!

காது, மூக்கு தொண்டை, ஆக்ஷன்!

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு டாக்டர் நடிக்க வந்திருக்கிறார்.

முன்னொரு காலத்தில் தமிழில் நடிகராக அறிமுகமாகி பின்னர் தெலுங்குக்குத் தாவி ஆக்ஷன் ஹீரோவாக அதகளப்படுத்தியவர் டாக்டர் ராஜசேகர். உத்தமபாளையத்தைச் சேர்ந்தவரான ராஜேசகர், மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தவர்.

டாக்டராக பிராக்டிஸ் செய்து வந்த ராஜசேகர் அப்படியே ஆக்ஷனுக்கு மாறினார். தமிழில் அவருக்கு பெரிய அளவில் லக் இல்லை. ஆனால் தெலுங்கில் அதிரடி நாயகனாக சில காலம் கொடி நாட்டினார்.

இப்போது இன்னொரு டாக்டர் நடிகராக தமிழுக்கு வந்துள்ளார். இவரது பெயர் டாக்டர் ராம். ராஜசேகர் பொது என்றால் ராம், காது, மூக்குத் தொண்டை.

திருச்சியைச் சேர்ந்த ராம், கட்டுவிரியன் படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடி போடுபவர் கண்ணாடி விரியன் மாளவிகா. முதல் முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் அம்மா, மகளாக நடித்துள்ளார் மாளவிகா.

முதல் படத்திலேயே கிளாமர் நாயகியுடன் நடிப்பது குறித்து ராமிடம் கேட்டால், எனக்கு சிறு வயது முதலே நடிகராகும் ஆசை இருந்தது. ஆனால் எனது பெற்றோர் என்னை டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

அவர்களது ஆசைக்கு மதிப்பு கொடுத்து டாக்டர் ஆனேன். ஆனால் எனக்குள் ஒரு நடிகன் அணலாக தகித்துக் கொண்டிருந்தான். இதோ இப்போது நடிகனாகி விட்டேன்.

கலைப்புலி சேகரன் சாருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவரை நான் அணுகியபோது, நடிக்க விருப்பமா என்றார். ஆமாம் என்றேன். பின்னர் மாளவிகாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும், சரியா என்று கேட்டார்.

நடிக்க வாய்ப்பு கிடைத்ததோடு இல்லாமல், மாளவிகாவுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறப்பட்டதால் நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். அதேசமயம் லேசாக பதட்டமாகவும் இருந்தது.

ஏற்கனவே நான் அரண் படத்தில் கமாண்டோ கேரக்டரிலும், எம் மகன் படத்தில் ஒரு சிறு கேரக்டரிலும் தலை காட்டியுள்ளேன் என்கிறார் ராம்.

சரி, மாளவிகாவுடன் நடித்த அனுபவம் எப்படி என்று கேட்டால் டாக்டருக்கு வெட்கம் முகத்தை ரத்தச் சிவப்பாக்குகிறது. அட போங்க சார் என்று அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார்.

நடிப்பில் நிலைக்கும் வரை காது, மூக்கு, தொண்டையை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாராம். பிக்கப் ஆன பின்னர் டாக்டர் தொழிலுக்குப் பேக்கப் சொல்லும் எண்ணம் உள்ளதாம். இந்தப் படத்தில் ஆண்டி ஹீரோவாக வருகிறார் ராம்.

வசூல் ராஜா ஆவாரா இந்த டாக்டர்?

Please Wait while comments are loading...