ராமராஜன் நலமுடன் உள்ளார்...உடல்நிலை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்

சென்னை : 1980, 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் ராமராஜன். நடிகரும், டைரக்டருமான ராமராஜன் ரஜினி, கமலுக்கு இணையாக மக்கள் செல்வாக்குடன் பல படங்களில் நடித்து, பலரின் ஃபேவரைட் ஹீரோவாக இருந்தார்.

Ramarajan clarified about his health rumours

பெரும்பாலும் கிராமத்து கதை சார்ந்த படங்களிலேயே ராமராஜன் அதிகம் நடித்திருப்பார். நம்ம ஊரு நல்ல ஊரு, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரேகா, கவுதமி, குஷ்பு, கனகா என பல டாப் ஹீரோயின்களுடன் நடித்தவர்.

ராமராஜன் நடித்த பல படங்கள் பிளாக்பஸ்டர் படங்கள் தான். ரஜினி, கமல் பீக்கில் இருந்த சமயத்திலேயே அவர்கள் படங்களை விட அதிக வசூலை அள்ளியவர் ராமராஜன். ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் தியேட்டரில் அதிக நாட்கள் ஓடி, வசூல் சாதனை படைத்த படம்.

அப்படி புகழின் உச்சியில் இருந்த ராமராஜன், சினிமாவில் பிஸியாக இருந்த போதே அரசியலுக்கு வந்தார். அதன் பிறகு சினிமாவில் அவரின் மார்க்கெட் சரிய துவங்கியது. அதனால் கடந்த 20 ஆண்டுகளாக வெளியுலகில் அதிகம் தலைகாட்டாமலேயே வாழ்ந்து வருகிறார். மனைவி நளினியை விவாகரத்து செய்த பிறகு, அதிமுக கட்சியின் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்களில் பேசுவதற்காக மட்டுமே வெளியுலகிற்கு வந்தார்.

இந்நிலையில் ராமராஜனின் உடல்நிலை குறித்து சென்னையில் பல பகுதிகளில், பல விதமாக வதந்தி பரவி வருகிறது. இதனையடுத்து ராமராஜனின் பிஆர்ஓ விஜயமுரளி, அந்த வதந்திகள் பற்றி விளக்கம் அளித்துள்ளார். ராமராஜனின் உடல்நிலை குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ராமராஜன் உடல்நிலை குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளார். அதனால் தவறான எந்த தகவலையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அவர் விரைவில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். அதற்காக தயாராகி வருகிறார். விரைவில் அவரது புதிய படங்களின் துவக்க விழா நடைபெற உள்ளது என தெளிவுபடுத்தி உள்ளார்.

செந்தில், கவுண்டமணி என ஓய்வில் இருக்கும் பிரபல நடிகர்கள் பற்றி இது போல் அடிக்கடி வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ராமராஜனில் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு முன்பும் பல முறை ராமராஜனின் உடல்நிலை பற்றி பல தகவல்கள் பரவின. ஆனால் அப்போதெல்லாம் தான் நலமுடன் இருப்பதாக ராமராஜன் விளக்கம் அளித்த பிறகும் இது தொடர்ந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X