»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Subscribe to Oneindia Tamil

ட்ரவுசர் பாண்டி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ராமராஜன் நடித்த படம் ஒன்று அடுத்த மாதம்திரைக்கு வருகிறது.

கரகாட்டக்காரன். இந்த ஒரே ஒரு படத்தின் வெற்றியில் ராமராஜன் எங்கேயோ போனார். தங்கமான ராசா,புதுப்பாட்டு, பாட்டுக்கு நான் அடிமை என்று தொடர்ச்சியாக 12 படங்கள் கையில் வைத்துக் கொண்டு, ராமராஜன்அப்போது பண்ணிய பந்தாவும், அலம்பலும் திரையுலகில் பிரபலம்.

கரகாட்டக்காரன் படம் ஓடியது இளையராஜாவுக்காகவும், கவுண்டமணி- செந்தில் காமெடிக்காகவும்தான்,ராமராஜனுக்காக அல்ல என்பது அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்த போதுதான் தயாரிப்பாளர்கள்உணர்ந்தார்கள்.

விளைவு ராமராஜன் காட்டில் பெய்த அடைமழை நின்று போய், வெயில் கொளுத்தத் தொடங்கியது. அந்தச் சமயம்,திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயித்து எம்.பியாகி டெல்லிப் பக்கம் போய்விட்டார். இடையிடையேவிவசாயி மகன், பொன்னான நேரம், சீறி வரும் காளை போன்ற டப்பா படங்களை கொடுத்து தியேட்டர்களைவிட்டு மக்களை விரட்டிக் கொண்டிருந்தார்.

இவற்றில் சொந்தத் தயாரிப்பில் இவர் இயக்கிய சில படங்கள் இமாலயத் தோல்வியைத் தரவே, கடனில்விழுந்தார். அதே நேரத்தில் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு, காதல் மனைவி நளினி விவாகரத்து வாங்கிக்கொண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

கடன் அதிகமாக சில மாதங்களுக்கு முன்பு, எனது சொந்த ஊருக்குப் போவதற்குக் கூட காசு இல்லை; கையில்ரூ.500 கூட இல்லை என்று பரிதாபமாக பேட்டியளித்தார். பின்னர் அம்மா அழைத்து, ப வைட்டமின் கொடுத்துஅனுப்பினார்.

விஷயத்துக்கு வருகிறோம். சில வருடங்களுக்கு முன்பு, ராமராஜன் கதாநாயகனாக நடிக்க ஜெயகாந்த் என்பவர்வேலா என்ற படத்தை தயாரித்தார்.

இப்படத்தின் இயக்குனரும் ராமராஜன்தான் (தயாரிப்பாளரின்தைரியத்தைப் பாராட்டத்தான் வேண்டும்)

பணப்பிரச்சனை காரணமாக இந்தப் படம் பாதியிலேயே நின்று போனது. இப்போது தூசி தட்டி இந்தப் படத்தைமீண்டும் எடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.

ரோஜா தான் கதாநாயகி. படத்தின் தலைப்பை இப்போது நம்ம ஊர்க்காரன்என்று மாற்றியுள்ளார்கள்.

சென்னை, ஊட்டி, கொடைக்கானல், கோபிச் செட்டிபாளையம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. படம்அடுத்த மாதம் திரைக்கு வருகிறதாம்.

இதில் ராமராஜன் புல் டவுசர் போட்டுத்தான் நடித்துள்ளாராம்.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil