»   »  நான் தப்பிச்சுட்டேன் - ரமேஷ்

நான் தப்பிச்சுட்டேன் - ரமேஷ்

Subscribe to Oneindia Tamil

மதுரை வீரன் சூப்பராக ஓடத் தொடங்கியிருப்பதால், ஜாலியாகியுள்ளார் ஜித்தன் ரமேஷ்.

ஆர்.பி.செளத்ரிக்கு இரண்டு மகன்கள். ஒருவர் ஜீவா. அவர் தேறி விட்டார், கிளப்பியும் வருகிறார். ஆனால் தேறா மன்னனாக இருப்பவர் ரமேஷ் மட்டுமே. ஜித்தன் மூலம் அறிமுகம் ஆன ரமேஷ் அதன் பின்னர் உருப்படியாக நடிக்கவில்லை.

தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வந்தார் ரமேஷ். அத்தோடு அவரது குரலும் அவருக்கு செட் ஆகாததால், கண்டபடி பலரும் கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் கல்யாணத்தைக் கட்டிக் கொண்டு இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த ரமேஷ், சின்ன இடைவெளிக்குப் பிறகு மதுரை வீரன் மூலம் மீண்டும் தனது அதிர்ஷ்டத்தை பரீட்சிக்க வந்துள்ளார்.

இப்படத்தில் தம்பி ஜீவாவே, ரமேஷுக்குக் குரல் கொடுத்துள்ளாராம். படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால் ரமேஷும், செளத்ரியும் சந்தோஷமாக உள்ளனராம்.

அவரது தி.நகர் அலுவலகத்தில் போய் சந்தித்தபோது, சந்தோஷமாக இருக்கிறேன். முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக இந்தப் படம் மூலம் நான் நிரூபணமாகியுள்ளேன். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது என்றார்.

தனது மகனாக இருந்தாலும் கூட ரமேஷை தனது பேனரில் அறிமுகப்படுத்தவில்லை செளத்ரி. ராதிகாவின் ஜித்தன் மூலம்தான் அறிமுகமானார் ரமேஷ்.

அதன் பின்னர் நான்கு படங்களில் நடித்து முடித்து விட்டார் ரமேஷ். ஆனால் எல்லாமே அட்டர் பிளாப் படங்கள். ஆனால் இப்போது நான்கு படங்கள் ரமேஷ் கையில் உள்ளதாம்.

புலி வருது படத்தில் காம்னாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ரமேஷ். அதேபோல, போட்டி என்று ஒரு படம். பின்னர் கவிகாளிதாஸ் இயக்கத்தில் ஒரு படம் என திருப்திகரமாக இருக்கிறது ரமேஷின் மார்க்கெட் நிலவரம்.

தொடர்ந்து நல்லாப் பேசி நடிச்சா ரமேஷும் ஜெயிக்கலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil