»   »  மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராகும் ராணா டகுபதி

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராகும் ராணா டகுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் ராணா மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக மாறவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் உலகளவில் நடிகர் ராணா புகழ்பெற்று இருக்கிறார். தற்போது பாகுபலி 2 திரைப்படத்தில் ராணா நடித்து வருகிறார்.

Rana Daggubati Micromax brand ambassador?

இந்நிலையில் புகழ்பெற்ற மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நடிகர் ராணா டகுபதி நடிக்கவிருக்கிறார் என்று டோலிவுட் வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஏற்கனவே பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸ் மகேந்திரா கார் விளம்பரத்தில் சமீபத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பாகுபலியில் வில்லனாக நடித்திருந்த ராணா மொபைல் விளம்பரத்தில் தோன்றவிருக்கிறார்.

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ்ப் பதிப்பில் தற்போது ராணா டகுபதி நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாகுபலி 2 படத்திற்காக பிரபாஸ், ராணா டகுபதி இருவரும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
The latest buzz in tollywood Rana Daggubati is likely to be signed by Micromax Mobiles as their brand ambassador. Currently, Rana is working on the Tamil remake of Malayalam hit Bangalore Days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil