»   »  பாகுபலி 2... ராணாவின் மிரட்டல் 'லுக்'!

பாகுபலி 2... ராணாவின் மிரட்டல் 'லுக்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இந்திய சினிமாவில் தனி முத்திரைப் பதித்த எஸ்எஸ் ராஜமௌலியின் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி-2' வேகமாகத் தயாராகி வருகிறதுய

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் அக்டோபர் 22-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் பிரதான கேரக்டர்களில் ஒருவரான நடிகர் ராணாவின் புதிய தோற்றப் புகைப்பபடம் வெளியாகியுள்ளது.

Rana reveals his Bahubali 2 look

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இரண்டாம் பாகத்தில் பல்லாள தேவன் என்னும் கதாபாத்திரம் கொஞ்சம் வயதான தோற்றத்தில் வருகிறது. எனவே அதற்காக தசை வலு கூடிய மற்றும் எடை அதிகமான தோற்றத்தில் நடிக்க வேண்டியிருந்தது. எனவே என்னுடைய எடையை 108 முதல் 110 கிலோ வரை இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.

Rana reveals his Bahubali 2 look

ஒரு நாளைக்கு இரண்டரைமணி நேரம் என்ற வீதத்தில் கடந்த ஐந்து மாதங்களாக கடும் உடல் பயிற்சிகள் செய்து வந்தேன். என்னுடைய பயிற்சியாளர் கிரி என்னுடன் கூடவே இருந்து இவற்றை எல்லாம் கண்காணித்து வந்தார்," என்றார்.

ராணாவின் கடும் உழைப்பு மற்றும் இந்த மிரட்டல் தோற்றத்துக்கு டோலிவுட், கோலிவுட் என அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

English summary
Daggupati Rana has revealed his Bahubali 2 look for the first time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil