»   »  ஊரை சுற்றும் ரோமியோ, கடற்படை அதிகாரியாக மாறும் பாகுபலி 'பல்லாள தேவன்'

ஊரை சுற்றும் ரோமியோ, கடற்படை அதிகாரியாக மாறும் பாகுபலி 'பல்லாள தேவன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் ராணா தனது அடுத்த தெலுங்கு படத்தில் கடற்படை அதிகாரியாக வருகிறாராம்.

எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபாலி படத்தில் பல்லாள தேவனாக நடித்து அசத்தி இருந்தார் ராணா. அவர் தற்போது இரண்டு புதிய தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஒரு படத்தில் ஜாலியாக ஹீரோயினை காதல் செய்து டூயட் பாடும் ரோமியோவாக நடிக்கிறார். படத்தை பிரேம் ரக்ஷித் இயக்க ராணாவின் தந்தை டக்குபாதி சுரேஷ் பாபு தயாரிக்கிறார்.

Rana Daggubati

படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று கூறப்படுகிறது. ராணாவுக்கு ஜோடியாக ரெஜினா கசான்ட்ரா நடிக்கிறார். மற்றொரு படத்தில் ராணா கடற்படை அதிகாரியாக நடிக்க உள்ளாராம். 1971ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த போரின்போது பாகிஸ்தானைச் சேர்ந்த பிஎன்எஸ் காசி என்ற நீர்மூழ்கி கப்பல் மாயமானது.

அந்த கப்பல் மாயமானதை மையமாக வைத்து தான் ராணாவின் படத்தின் கதை உள்ளதாம். படத்தை 31 வயதாகும் சங்கல்ப் என்பவர் இயக்குகிறார். இது தான் அவர் எழுதி, இயக்கும் முதல் படம் ஆகும். அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளது.

அந்த படத்தின் கதை சங்கல்ப் எழுதிய ப்ளூ ஃபிஷ் என்ற புத்தகத்தின் சாயலை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
Rana Daggubati is all set to act as a naval officer in his upcoming movie to be directed by debutant Sankalp.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil