மனுஷன் ரொம்ப தெளிவு...இன்ஸ்டா அக்கவுண்ட்டை ரகசியமாக வைத்திருக்கும் பிரபல ஹீரோ

மும்பை : பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ரன்பீர் கபூர். பாலிவுட்டின் பிரபலமான நீது மற்றும் மறைந்த முன்னணி நடிகர் ரிஷி கபூரின் மகன் தான் ரன்பீர் கபூர். இவருக்கு ரித்திமா கபூர் சகானி என்ற சகோதரியும் உள்ளார்.

1996 ம் ஆண்டு ரிலீசான பிரேம் காந்த் படத்தை இயக்கிய ராஜீவ் கபூர் இவரின் மாமா. செட்டில் இவர் தான் அனைத்து வகையிலும் உதவி செய்துள்ளார். சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே இவர் மீது அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு.

அதிலும் ரன்பீர் - ஆலியா பட் காதலால் பாலிவுட்டே இவரை பற்றி பரபரப்பாக பேசியது. ரசிகர்களின் ட்ரீம் கேர்ளாக வலம் வந்த ஆலியாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு விட்டார் என்பதால் இவர் மீது மற்றவர்களுக்கு கொஞ்சம் பொறாமையும் உண்டு.

ரன்பீரின் முதல் சம்பளம்

ரன்பீரின் முதல் சம்பளம்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் வாங்கிய முதல் சம்பளம் பற்றி ஓப்பனாக கூறினார் ரன்பீர். அவர் தனது பேட்டியில், நான் வாங்கிய முதல் சம்பளம் ரூ.250. ஒரு நல்ல பையனை போல் அதே அப்படியே எடுத்துக் கொண்டு நேராக என் அம்மா ரூமிற்கு போய் அவரின் காலடியில் வைத்தேன். அதை பார்த்ததும் அவர் ஆனந்த கண்ணீர் வடிக்க துவங்கினார். அப்போது நான் நடந்து கொண்டதை பார்த்தால் சினிமாவில் வரும் சென்டிமென்ட் காட்சி போலவே இருந்தது என்றார்.

இன்ஸ்டா அக்கவுண்ட் இருக்கா

இன்ஸ்டா அக்கவுண்ட் இருக்கா

ரன்பீரின் ரகசிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் பற்றி கேட்டதற்கு, எனக்கு சோஷியல் மீடியா அக்கவுண்ட் இருக்கு. ஆனால் அதில் போஸ்ட் எதுவும் போடுவதில்லை. அதனால் எனக்கு ஃபாலோயர்கள் யாரும் கிடையாது. அதனால் எனக்கு என்ன கிடைக்க போகிறது. ஆனால் எப்போதும் அப்படியே இருக்க முடியாது. நான் எனக்கு அக்கவுண்ட்டை பப்ளிக் ஆக்குவேன். இப்போதும் நான் சரியாக தான் இருக்கிறேன். சோஷியல் மீடியா இல்லாமலேயே நன்றாக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

ஓ...இவருக்கான அக்கவுண்டா

ஓ...இவருக்கான அக்கவுண்டா

சமீபத்தில் நடிகர் வருண் தவான் தான் ரன்பீரின் ரகசிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் பற்றி சொல்லி அம்பலப்படுத்தினார். அது ஆலியா பட்டிற்கான ரகசிய அக்கவுண்ட் என்று கூட கிண்டலாக சொன்னார். இது பற்றி ரன்பீரின் அம்மா ரிதுவும் ஆமாம் என்பது போல் சிரித்தார். ரன்பீர், ஆலியாவின் திருமணம் ஏப்ரல் 14 ம் தேதி நடைபெற்றது. இவர்களின் திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சி மும்பையில் உள்ள ரன்பீரின் வீட்டிலேயே நடைபெற்றது.

ரிலீசுக்கு தயாரான பிரம்மாஸ்திரா

ரிலீசுக்கு தயாரான பிரம்மாஸ்திரா

ரன்பீர் தற்போது பிரம்மாஸ்திரா பார்ட் ஒன் : சிவா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு அனைவரின் வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தில் ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா, மெளனி ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 9 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பிரம்மாஸ்திரா படத்தை தொடர்ந்து அனிமல் என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் நடித்து வருகிறார் ரன்பீர்.

Recommended Video

கொஞ்சும் தமிழில் பேசிய Alia Bhatt & Jr.NTR | Alia Bhatt Speech in RRR promotion
பல சம்பவம் காத்திருக்கு போலவே

பல சம்பவம் காத்திருக்கு போலவே

இதே போல் டைரக்டர் கரண் மல்கோத்ரா இயக்கிய ShamShera படத்திலும் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் நடக்கும் கதையான இதில் ரன்பீர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சஞ்சய் தத், வாணி கபூர் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ஜுலை 22 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரன்பீர் நடித்துள்ள பிரம்மாஸ்திரா, ShamShera இரண்டு படங்களும் பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X