»   »  பிரபல இயக்குனர் என்னை அடித்துக் கொடுமைப்படுத்தினார்: இளம் ஹீரோ குற்றச்சாட்டு

பிரபல இயக்குனர் என்னை அடித்துக் கொடுமைப்படுத்தினார்: இளம் ஹீரோ குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார்.

ரன்பிர் கபூர் நடிக்க வரும் முன்பு உதவி இயக்குனராக பணியாற்றினார். தனது தந்தை ரிஷி கபூர் ஐஸ்வர்யா ராயை வைத்து இயக்கிய படம் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் பிளாக் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

அதன் பிறகே பன்சாலியின் சாவரியா படம் மூலம் ஹீரோவானார். இந்நிலையில் அவர் பன்சாலி பற்றி கூறுகையில்,

அடி, உதை

அடி, உதை

நான் பிளாக் படத்தில் உதவி இயக்குனராக இருந்தபோது பன்சாலி என்னை முழங்கால் போட வைத்தார். அவர் என்னை அடித்து உதைத்தார். ஒரு கட்டத்தில் அவரின் கொடுமைகளை தாங்க முடியாமல் படத்தை விட்டு வெளியேறினேன்.

ரன்பிர்

ரன்பிர்

நான் 10 முதல் 11 மாதங்கள் அவரிடம் பணியாற்றினேன். அதன் பிறகு என்னால் முடியவில்லை. எல்லாம் அளவுக்கு மீறி நடக்கிறது. இனியும் அவரின் கொடுமையை தாங்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.

பன்சாலி

பன்சாலி

பன்சாலி என்னை அடித்து கொடுமைப்படுத்தியிருக்கலாம். ஆனால் இன்று நான் வெளிப்படுத்தும் நடிப்பு எல்லாம் அவரிடம் கற்றுக் கொண்டது தான். அவர் நடிப்பு பற்றி அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் என்றார் ரன்பிர்.

ஏ தில் ஹை முஷ்கில்

ஏ தில் ஹை முஷ்கில்

அடுத்தடுத்து தனது படங்கள் தோல்வி அடைந்ததால் கவலையில் இருந்த ரன்பிருக்கு ஏ தில் ஹை முஷ்கில் படம் ஹிட்டாகியுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

English summary
Bollywood actor Ranbir Kapoor made a very shocking revelation that Sanjay used to beat and torture him, when he was assisting him on the sets of Black and that is the reason why he just quit the film.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil