»   »  ‘அய்யா’வில் கமலின் பாடலுக்கு நடனமாடும் ப்ருத்விராஜ் – ராணிமுகர்ஜி ஜோடி

‘அய்யா’வில் கமலின் பாடலுக்கு நடனமாடும் ப்ருத்விராஜ் – ராணிமுகர்ஜி ஜோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Prithiviraj and ranimukherjee
அய்யா படத்தில் தென்னிந்திய நடிகர்களின் காதில் புகை வரும் அளவிற்கு இந்தி நடிகை ராணி முகர்ஜியுடன் செம குத்தாட்டம் போட்டுள்ளார் ப்ரித்விராஜ்.

தமிழ் இளைஞன் ஒருவருக்கும், மராத்திய பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை பற்றிய படம் தான் "அய்யா". படத்தில் தமிழ் இளைஞனாக ப்ருத்விராஜூம், மராட்டிய பெண்ணாக ராணி முகர்ஜியும் நடிக்கின்றனர்.

இதில் மூன்று குத்தாட்டம் பாடல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் 'Dreamum Wakeupm' இது 80 களில் வெளியான கமலின் சூப்பர் ஹிட் பாடலின் டியூன். அதை அப்படியே இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர். ராணி முகர்ஜியின் கிளாமர் உடையில் ப்ரிதிவிராஜூம் கமலைப் போல பாடல் முழுவதும் சட்டை போடாமல் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.

தென்னிந்திய மொழியும், ஆங்கிலமும் கலந்து எழுதப்பட்டுள்ள இந்த பாடலின் இடையில் 1,2,3,4 என்று தமிழும் வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டு நாட்கள் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற மராத்திய இயக்குநர் சச்சின் குந்தல்கர், இந்தியில் இயக்கும் "அய்யா" படத்தின் கதை ரொம்பவே பிடித்து போக, உடனே ஓ.கே.‌ சொல்லியிருக்கிறார் ப்ருத்விராஜ்.

பாலிவுட் படங்களில் ஏற்கனவே 'அப்படிப்போடு' பாடலும், 'ரிங்கா ரிங்கா' பாடலும் ரீமேக் ஆகியுள்ளன. அந்த வரிசையில் இந்தப் பாடலும் இடம் பெற்றுள்ளது.

English summary
Successful South songs have often attracted Bollywood filmmakers and made them take inspiration from it. Be it movies or tracks, the Hindi film industry never loses out an opportunity to take the essence to cater the large audience. Now, a popular track of Kamal Hassan has inspired Rani Mukherjee's upcoming Aiyya.
Please Wait while comments are loading...