»   »  வெறும் 15 நிமிஷம் டான்ஸ் ஆட ரூ. 5 கோடி சம்பளம் வாங்கும் இளம் நடிகர்

வெறும் 15 நிமிஷம் டான்ஸ் ஆட ரூ. 5 கோடி சம்பளம் வாங்கும் இளம் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
15 நிமிடங்கள் நடனமாட ரன்வீர் சிங்கிற்கு ரூ. 5 கோடி!- வீடியோ

மும்பை: ஐபிஎல் துவக்க விழாவில் 15 நிமிடங்கள் நடனமாட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வழங்கப்படும் சம்பளம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக உள்ளார் ரன்வீர் சிங். அவரும், நடிகை தீபிகா படுகோனேவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். திருமண ஷாப்பிங்கில் தீபிகா பிசியாக உள்ளார்.

ரன்வீர் சிங் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

சக்தி

சக்தி

ரன்வீர் சிங் பெயரை சொன்னதுமே மனிதருக்கு எங்கிருந்து இவ்வளவு சக்தி உள்ளது என்று தான் அனைவரும் கேட்பார்கள். அந்த அளவுக்கு துருதுருவென இருப்பார்.

டான்ஸ்

டான்ஸ்

ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் துவக்க விழாவில் நடனமாடுமாறு ரன்வீர் சிங்கிடம் கேட்டுள்ளார்களாம்.

ரூ. 5 கோடி

ரூ. 5 கோடி

ஐபிஎல் துவக்க விழாவில் வெறும் 15 நிமிடங்கள் ஆட ரன்வீர் சிங்கிற்கு ரூ. 5 கோடி சம்பளமாம். ரன்வீருக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளதால் அவர் கேட்ட தொகையை கொடுக்க சம்மதித்துள்ளார்களாம்.

வியப்பு

வியப்பு

15 நிமிடம் ஆட்டம் போடுவதற்கு ரன்வீருக்கு ரூ. 5 கோடி சம்பளமா என்று திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வியக்கிறார்கள். அவர் கெரியரின் உச்சத்தில் இருப்பதால் இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

English summary
Bollywood actor Ranveer Singh is getting paid Rs. 5 crore to perform for 15 minutes at the IPL opening ceremony to be held on april 7.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X