»   »  என்னா விளம்பரம்டா சாமி: தனுஷ், இந்த நடிகர்கிட்ட டியூஷன் போகணும்!

என்னா விளம்பரம்டா சாமி: தனுஷ், இந்த நடிகர்கிட்ட டியூஷன் போகணும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு விளம்பரம் தேட சொல்லித் தரத் தேவையே இல்லை என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பிற நடிகர்களைவிட வித்தியாசமனர். படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அனுஷ்கா சர்மாவை காதலித்த அவரின் தற்போதைய காதலி தீபிகா படுகோனே. ராம் லீலா படத்தில் நடிக்கையில் ரன்வீருக்கும், தீபிகாவுக்கம் இடையே காதல் ஏற்பட்டது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரன்வீர் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

தோளில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள ரன்வீர் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபரேஷன் தியேட்டரில் தனது மயக்க ஊசி போட்டு தான் மயங்கும் வரை அது பற்றி ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

விளம்பரம்

விளம்பரம்

பாலிவுட் பிரபலங்களில் சோனம் கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ட்ரிப்ஸ் ஏற்றப்பட்ட தனது கையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார். ரன்வீர் சிங் அதற்கும் ஒரு படி மேலே சென்றுவிட்டார். மனிதர் என்னமா விளம்பரம் தேடுகிறார், இது நமக்கு தோன்றாமல் போச்சே என்று பாலிவிட்டில் சிலர் கிசுகிசுக்கிறார்கள்.

செக்ஸ்

செக்ஸ்

பிற நடிகர்கள் செக்ஸ் பற்றி பேசத் தயங்குகையில் ரன்வீரோ தன்னால் செக்ஸ் இல்லாமல் இருக்கவே முடியாது என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். மேலும் தான் 12 வயதில் முதன்முதலாக செக்ஸ் வைத்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் தனது கொலவெறி பாடலை மும்பையில் உள்ள பிரபல விளம்பர ஏஜென்சி மூலம் தான் உலகமெல்லாம் பிரபலமாக்கினார் என்று கூறப்பட்டது. ரன்வீரோ எந்த ஏஜென்சியின் துணையும் இல்லாமல் சூப்பராக விளம்பரம் தேடியுள்ளார்.

English summary
Ranveer Singh's tweet about his operation has made Bollywood wonder about the actor's extent of doing things to get attention.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil