»   »  பொங்கலுக்கு பீமா!

பொங்கலுக்கு பீமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vikram with Trisha
விக்ரம், திரிஷா நடிப்பில், லிங்குச்சாமியின் இயக்கத்தில், ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் பீமா பொங்கலுக்கு திரைக்கு வருவதாக தயாரிப்பாளர் ரத்னம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த படம் பீமா. மஜாவை முடித்த கையோடு இந்தப் படத்துக்கு வந்தார் விக்ரம். இடை இடையே பல்வேறு பிரச்சினைகள் குறுக்கிட படம் படு மெதுவாக வளர்ந்து வந்தது.

படம் முடிந்த பிறகும் கூட ரிலீஸாக முடியாமல் பணப் பிரச்சினை குறுக்கிட்டதால் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிைலயில் படம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து ரிலீஸுக்குத் தயாராகி விட்டது பீமா. சென்சார் தொடர்பான நடைமுறைகள் முடிந்து, எந்தவித வெட்டும் இல்லாமல் தணிக்கை சான்றிதழை வாங்கி விட்டனர்.

பொங்கலுக்கு படம் திரைக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் விக்ரம் படம் இது. திரிஷாவும், இந்தப் படத்தை ரொம்பவே நம்பியுள்ளார். விக்ரமுடன், சாமிக்குப் பிறகு நடித்திருக்கும் திரிஷா, இதில் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடித்துக் கலக்கியுள்ளார்.

படம் குறித்து ஏ.எம்.ரத்னம் கூறுகையில், ஒரு கட்டத்தில் நிதிப் பிரச்சினைகளை சரி செய்து மீள முடியுமா என்ற சந்தேகத்தில் இருந்தேன். ஆனால் எப்படியோ சரி செய்து, கடன்களை அடைத்து விட்ேடன். இப்போது படம் ரிலீஸாக தயாராகி விட்டது என்றார் அவர்.

இந்தப் படத்தின் வெற்றி, நீண்ட காலமாக தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணித் தயாரிப்பாளராக விளங்கிய ஏ.எம்.ரத்னத்தின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் என்பதால் பீமாவை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil