Ravi Mohan Studios: மகன்கள் மிஸ்ஸிங்.. கெனிஷாவுடன் ஜோடியாக வந்த ரவி மோகன்.. தயாரிப்பாளராகிட்டாரே!

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்து பிரிந்தாலும் நடிகர் தனுஷ் தனது பட விழாக்களில் தனது மகன்கள் இருவரையும் அழைத்துச் செல்வதை பார்க்க முடியும். ஆனால், ரவி மோகன் இன்று தனது தயாரிப்பு நிறுவன அறிமுக விழாவில் மகன்கள் மற்றும் குடும்பத்தினர் யாருமில்லாமல் கெனிஷா ரவியுடன் ஜோடியாக வந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை ஆர்த்தி ரவியின் அம்மா சுஜாதா விஜயகுமார் நடத்தி வருகிறார். நடிகர் ஜெயம் ரவி தனது மாமியார் தயாரிப்பில் பூமி, அடங்கமறு மற்றும் சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Ravi Mohan and Kenisha comes together and matching matching dress for Ravi Mohan Studios event

மனைவியுடன் மோதல் ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், தற்போது சொந்தமாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

தயாரிப்பாளர், இயக்குநரான ரவி மோகன்: எடிட்டர் மோகனின் மூத்த மகன் மோகன் ராஜா இயக்குநராக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது சகோதரரான ரவி மோகன் ஹீரோவாக பல வருடங்களாக நடித்து வருகிறார். அண்ணன் மோகன் ராஜா இயக்கத்திலேயே பல வெற்றிப் படங்களில் நடித்து வந்த ரவி மோகன் தற்போது தனியாக ஒரு படத்தை இயக்கப் போகிறார். மேலும், ரவி மோகன் ஸ்டூடியோஸ் தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அதன் அறிமுக விழா இன்று நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

கெனிஷாவுடன் ஜோடியாக வந்த ரவி மோகன்: திருப்பதிக்கு நேற்று சென்று தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்கு முன்னதாக ஆசி பெற்று வந்தார். அப்போதும் கெனிஷா ரவி மோகன் உடன் இருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற ரவி மோகன் ஸ்டூடியோஸ் அறிமுக விழாவிலும் வெள்ளை நிற உடையில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக வந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

மகன்கள் மிஸ்ஸிங்: இந்த நிகழ்ச்சியில் மோகன்ராஜா பங்கேற்றுள்ளார். மேலும், ரவி மோகன் குடும்பத்தினர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், ரவி மோகனின் மகன்கள் ஆரவ் மற்றும் அயான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் கசிந்துள்ளன. அம்மா ஆர்த்தி ரவி மகன்களை தொடர்ந்து அப்பா ரவி மோகனிடம் விட அனுமதிப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X