Bro Code: ரவி மோகனை மொட்டையடிக்காமல் விடமாட்டாங்க போல.. முதல் படத்துக்கே இத்தனை கோடி பட்ஜெட்டா?

சென்னை: தயாரிப்பாளராக மாறியுள்ள ரவி மோகனை வைத்து ப்ரோ கோட் எனும் படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற ரவி மோகன் ஸ்டூடியோஸ் அறிமுக விழாவே பல கோடி செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ரவி மோகனின் மார்க்கெட்டை விட அதிகமாக ப்ரோ கோட் படத்தின் பட்ஜெட் உள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி ஷாக்கிங் தகவலை கூறியுள்ளார்.

மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் குறைந்த பட்ஜெட்டில் ரவி மோகன் நடித்த படங்கள் எல்லாம் ஃபிளாப் ஆகி வந்த நிலையில், சோலோ ஹீரோவாக ரவி மோகனால் ஒரு ஹிட் கூட கடந்த சில ஆண்டுகளில் கொடுக்க முடியவில்லை.

Ravi Mohan s Bro Code budget details shocks kollywood
Photo Credit:

கடைசியாக பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரவி மோகன் நடித்த கோமாளி படம் தான் அவருக்கு வெற்றிப் படமாக மாறியது. மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர்கள் நடித்த பொன்னியின் செல்வன் 500 கோடி பாக்ஸ் ஆபீஸ் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம் மாதிரி கிராண்டா: ப்ரோ கோட் படத்தின் அறிமுக ப்ரோமோ வீடியோ டிரெண்டாகி வருகிறது. இளையராஜாவின் "கல்யாண மாலை" பாடலுக்காகவே ரிப்பீட் மோடில் பலரும் அந்த வீடியோவை ரசித்து பார்த்து லைக் செய்து வருகின்றனர். மேலும், அந்த படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக ஸ்ரீகெளரி ப்ரியா, எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், டிஜேவாக பேரரசு என ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாளம் இடம்பெற்றுள்ளன. மேலும், அறிமுக ப்ரோமோவே விளம்பரம் போல பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

70 கோடி பட்ஜெட்: ரவி மோகன் நடிப்பில் தொடர்ந்து வெளியாகி வரும் படங்கள் ஃபிளாப் ஆகி வரும் நிலையில், சொந்த தயாரிப்பில் ரவி மோகனை வைத்து குறைவான பட்ஜெட்டில் கார்த்திக் யோகி படத்தை எடுத்து ஹிட் கொடுக்காமல் பெரிய பட்ஜெட்டுக்கு ரவி மோகனை இழுத்து விடப்பார்க்கிறார் என பிஸ்மி கூறியுள்ளார். ஏற்கனவே இவர் சந்தானத்தை வைத்து டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி படங்களை இயக்கினார். அந்த படங்கள் எல்லாம் காமெடியாக நல்லா இருந்தாலும் கலெக்‌ஷனாக பெரிதாக வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்ஜே சூர்யா தான் காப்பத்தணும்: எப்படி இருந்தாலும் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் நிலையில், அவர் படத்தை காப்பாற்றி விடுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அவர் கடைசியாக நடித்த இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்கள் ஃபிளாப் ஆன நிலையில், ரவி மோகன் அகல கால் வைக்காமல் இருப்பது நலம் என்றே திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரவி மோகனின் ஜீனி, கராத்தே பாபு உள்ளிட்ட படங்களை காணவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றால், ப்ரோ கோட் படத்தின் வசூல் எல்லாம் 100 கோடி அசால்ட்டாக தாண்டவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X