விவாகரத்துக்கு பிறகு இரண்டு நடிகைகளோடு என்ன ஆட்டம்?.. ஜீனி ரவி மோகன் கலக்குறாரே.. சூப்பர் சம்பவம்

சென்னை: ரவி மோகன் நடிப்பில் ஜீனி படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். அர்ஜுனன் படத்தை இயக்கியிருக்கிறார். பெரிய எதிர்பார்ப்போடு இந்தப் படம் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்து; தனது திறமையால் மட்டும் உயர்ந்த இடத்துக்கு வந்திருப்பவர் ரவி மோகன். ஆக்‌ஷன், காதல், காமெடி என எந்த ஜானரில் நடித்தாலும் அதில் தன்னை நிரூபித்துவிடுபவர் அவர். கடைசியாக அவரது நடிப்பில் கிருத்தி உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. அந்தப் படம் மெகா ஹிட் இல்லையென்றாலும் முதலுக்கு மோசமில்லை என்ற ரிசல்ட்டை பெற்றது.

அடுத்த படங்கள்: ரவி மோகன் தற்போது பிஸியான லைன் அப்பை வைத்திருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்கும் அவர்; கராத்தே பாபு, ஜீனி, ப்ரோ கோட், தனி ஒருவன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கும் அவர்; யோகிபாபுவை ஹீரோவாக வைத்து படம் ஒன்றையும் இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ravi Mohan s Genie Movie First Single Abdi Abdi is Out Yesterday
Photo Credit:

பிரமாண்ட ஜீனி: இந்த லைன் அப்பில் ஜீனி திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. அர்ஜுனன் இயக்கும் இப்படத்தில் ரவியுடன் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரவியின் கரியரிலேயே இப்படத்துக்குத்தான் அதிக பட்ஜெட் என தெரிகிறது.

முதல் சிங்கிள்: இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியிருக்கிறது. ' Abdi Abdi' என்ற அந்த பாடலை தீப்தி சுரேஷ், மைசா கரா ஆகியோர் பாடியிருக்க; மஷூக் ரஹ்மான் பாடலை எழுதியிருக்கிறார். ரஹ்மானின் துள்ளலான இசை பாடலுக்கு பலமாக இருக்கிறது. முக்கியமாக கீர்த்தி ஷெட்டியும், கல்யாணியும் இப்பாடலில் கவர்ச்சி நடனம் போட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கவர்ச்சி காண்பிக்காத கல்யாணி இதில் காண்பித்திருக்கும் கவர்ச்சியை வைத்து ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்ஸ்களை பறக்கவிடுகிறார்கள்.

ரவியை வைத்து செய்யும் ரசிகர்கள்: அதிலும் ரவி மோகனை ரசிகர்கள் வைத்து செய்கிறார்கள். அதாவது கல்யாணியும், கீர்த்தியும் ஆடிக்கொண்டிருக்கும்போது இவர் ஏன் இடை இடையே வருகிறார் என்று கலாய்க்கும் அவர்கள்; விவாகரத்துக்கு பிறகு ரவி மோகன் ஜாலியாக ஆட்டம் போடுகிறாரே என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். முன்னதாக தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று ரவி மோகன் நீதிமன்றம் சென்றிருப்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X