»   »  ரெஜினா மோத்வானி(ரெமோ)க்கும், ஏ.ஆர். ரஹ்மானுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா?

ரெஜினா மோத்வானி(ரெமோ)க்கும், ஏ.ஆர். ரஹ்மானுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் வரும் ரெஜினா மோத்வானிக்கும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கும் சம்பந்தம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த ரெமோ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படம் ரிலீஸான அன்று மட்டும் உலக அளவில் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளது.


படத்தை பார்ப்பவர்களால் சிவாவின் பெண் வேடத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


ரெமோ

ரெமோ

சிவா ரெஜினா மோத்வானி என்கிற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவா பெண் வேடம் போட்டதை பற்றி தான் அவரது ரசிகர்கள் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


ரசூல் பூக்குட்டி

ரசூல் பூக்குட்டி

ரெமோ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி கூறுகையில், ரெமோ படம் தொழில்நுட்ப ரீதியாக சவாலாக இருந்தது. அந்த நேரம் எனக்கு உதவி செய்தவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் என்றார்.


ரஹ்மான்

ரஹ்மான்

சிவகார்த்திகேயன் நடித்த நர்ஸ் கதாபாத்திரத்தின் குரலை டப்பிங் செய்ய ரஹ்மான் தான் தொழில்நுட்ப உதவி புரிந்தார். அவரால் தான் ரெமோவின் வாய்ஸ் நல்லபடியாக வந்தது என்றார் பூக்குட்டி.


தன்னடக்கம்

தன்னடக்கம்

ரஹ்மானின் உதவி பெறப்பட்ட கதாபாத்திரம் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனால் ரஹ்மானோ உதவி செய்துவிட்டு தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போன்று அடக்கத்துடன் உள்ளார்.


English summary
Oscar winning sound engineer Rasool Pookutty said that Isai Puyal AR Rahman provided technical support for the character Remo played by Sivakarthikeyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil