»   »  பிரியாணி ஹீரோ

பிரியாணி ஹீரோ

Subscribe to Oneindia Tamil

தியேட்டரை நிரப்ப என்ன வழி? ரித்தீஷ் காட்டும் நூதன வழிதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.

சின்னி ஜெயந்த்தின் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் கானல் நீர். புதுமுகம் ஜே.கே.ரித்தீஷ்தான் இதில் ஹீரோ. ஆள்தான் புதுமுகம், ஆனால் சரியான திருமுகமாக இருக்கிறார் ரித்தீஷ்.

நடித்து ஒரு படம்தான், அதுவும் வெளியாகி சில நாட்கள்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் ரித்தீஷுக்கு மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அலையென ரசிகர் மன்றங்கள் அமைக்கப்பட்டு கலக்க ஆரம்பித்து விட்டன (மன்றத்தை ஆரம்பித்து விட்டு நடிக்க வந்திருப்பார் போல!).

தனது படம் திரையிடப்படும் தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டை அவர்களாக மாட்ட மாட்டார்கள் (அப்படி ஒரு சூழ்நிலை வராது!) என ரித்தீஷ் நினைத்தாரோ என்னவோ, அதற்கு ஒரு சூப்பர் ஐடியாவை கடைப்பிடித்துள்ளார்.

அதாவது தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக ஆட்களைப் பிடித்து ஆளுக்கு 100 ரூபாய் பணம், ஒரு பாக்கெட் பிரியாணி (லெக் பீஸ் எல்லாம் போட்டது!), ஒரு இலவச டிக்கெட்டைக் கையில் கொடுத்து தியேட்டருக்கு தள்ளி விட்டு வருகிறாராம்.

இதனால் மதுரை, ராமநாதபுரத்தில் கானல் நீர் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் பிரியாணியும், கையுமாக பல பேர் அலை மோதிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. ஆனால் இப்படிக் கொடுத்தும் கூட தியேட்டர்களில் கூட்டத்தைக் காண முடியவில்லையாம்.

பல தியேட்டர்களில், எனது வாழ்க்கையில் இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை என்று ஆபரேட்டர்கள் ஓவென அழுகிறார்களாம் (இது ஆனந்தக் கண்ணீர் அல்ல, கடுப்பு அழுகை!).

சென்னையில் இப்படம் படு போண்டியாம். மதுரை, ராமநாதபுரத்தில் செய்ததைப் போல சென்னையில் முயற்சிக்கவில்லையாம் ரித்தீஷ்.

இதேபோல இன்னொரு மேட்டரையும் செய்து வைத்துள்ளாராம் ரித்தீஷ். அதாவது படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களின் உரிமையாளர்களை சந்தித்து, 25 நாட்களுக்கு படத்தை ஓட்டிடுங்க, அதற்கான பணத்தை (இழப்பீடு?) நான் கொடுத்து விடுகிறேன் என்று அக்ரிமென்ட் போட்டுள்ளாராம். பெரிய தொகையையும் தியேட்டர்காரர்களிடம் கொடுத்துள்ளாராம்.

ரித்தீஷ் வேறு யாருமல்ல, தமிழக அமைச்சர் சுப. தங்கவேலனின் செல்லப் பேரன்தான். பையில் வைத்துள்ள பணத்தை இப்படி இறைத்து விடுவற்குப் பதிலாக, சீரியஸாக நடிக்க ரித்தீஷ் முயற்சித்தால் நல்ல குணச்சித்திர நடிகராக வர வாய்ப்புள்ளது என்று கோலிவுட்காரர்கள் அட்வைஸ் செய்கின்றனர்.

முதல் பிரதி என்ற அடிப்படையில் இப்படத்தை இயக்கித் தருவதற்கு சின்னி ஜெயந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா, ஜஸ்ட் இரண்டரை கோடியாம். அத்தோடு படத்தில் ஒரு அரை லூசு வேடத்திலும் சின்னி நடித்திருக்கிறார்.

ஒண்ணும் பிரியலையே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil