»   »  எனக்கு இயக்குனர் ரோஹித் சைக்கிள் பரிசளித்தாரே: குழந்தை போன்று குதிக்கும் ஷாருக்

எனக்கு இயக்குனர் ரோஹித் சைக்கிள் பரிசளித்தாரே: குழந்தை போன்று குதிக்கும் ஷாருக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தில்வாலே பட இயக்குனர் ரோஹித் ஷெட்டி நடிகர் ஷாருக்கானுக்கு சைக்கிளை பரிசாக அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு படப்பிடிப்பின்போது பல முறை காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு பலமுறை அறுவை சிகிச்சை கூட நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் ஷாருக்கானுக்கு முழுங்காலில் அறுவை சிகிச்சை நடந்தது.

சிகிச்சைக்குப் பிறகு அவர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் தில்வாலே படத்தில் நடித்து வருகிறார்.

தில்வாலே

தில்வாலே

தில்வாலே படத்தை பற்றி தான் பாலிவுட்காரர்கள் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். ஏனென்றால் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக அவருக்கு மிகவும் ராசியான நடிகையான கஜோல் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது.

சென்னை எக்ஸ்பிரஸ்

சென்னை எக்ஸ்பிரஸ்

ரோஹித் ஷெட்டியும், ஷாருக்கானும் முன்னதாக சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் சேர்ந்து பணியாற்றினர். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் தான் தில்வாலே படத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

சைக்கிள்

சைக்கிள்

முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷாருக்கின் உடல்நலனில் அக்கறை கொண்டு அவருக்கு ரோஹித் ஷெட்டி சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

ஷாருக்கான்

வேலையில் இன்றைய தினம் நன்றாக இருந்தது. படப்பிடிப்பில் ரோஹித் எனது முழங்கால் குணமாக சைக்கிளை எனக்கு பரிசளித்தார். யேய்!!! என ஷாருக்கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Filmmaker Rohit Shetty has presented a bicycle to his Dilwale star Shah Rukh Khan. Shah Rukh, 49, who is shooting the upcoming film with Shetty in Bulgaria, said cycling will help him to recover from the knee surgery that he underwent last month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil