»   »  ப்ரியா ஆனந்துடன் காதலா?: கவுதம் கார்த்திக் விளக்கம்

ப்ரியா ஆனந்துடன் காதலா?: கவுதம் கார்த்திக் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ப்ரியா ஆனந்துடன் காதல் என்று கிசுகிசுக்கப்படுவது குறித்து நடிகர் கவுதம் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வை ராஜா வை படத்தில் நடித்தபோது கவுதம் கார்த்திக் மற்றும் ப்ரியா ஆனந்த் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது.

Romance with Priya Anand?: Gautham Karthik explains

இதை சம்பந்தப்பட்ட இருவரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இன்னும் அவர்களின் காதல் பற்றி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தற்போது இது குறித்து கவுதம் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் சினிமா இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

என்னை ப்ரியா ஆனந்துடன் சேர்த்து வைத்து பல காலமாக பேசுகிறார்கள். ஒரு ஆணும், பெண்ணும் நட்பாக இருக்க முடியாது என்று மக்கள் நம்புவதால் தான் இந்த பேச்சு.

நானும், ப்ரியாவும் நெருங்கிய நண்பர்கள், குடும்ப நண்பர்களும் கூட. எங்களுக்கு இடையே காதல் இல்லை என்றார்.

English summary
Actor Gautham Karthik has cleared the air about the alleged romance between him and his Vai Raja Vai co-star Priya Anand.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil