»   »  ஷக்தி அதிரடியாய்...

ஷக்தி அதிரடியாய்...

Posted By:
Subscribe to Oneindia Tamil


இயக்குநர் பி.வாசுவின் மகன் ஷக்தி, அதிரடி நாயகனாக அவதாரம் எடுக்கிறார்.

Click here for more images

பிரஷாந்த் என்ற பெயரில் சின்னத் தம்பியில் ஒரு பாட்டுப் பாடி நடிகராக அவதாரம் எடுத்த பி.வாசுவின் மகன் தற்போது ஷக்தி என்ற பெயரில் நாயகனாகியுள்ளார்.

பி.வாசுவே தனது மகனை நாயகனாகப் போட்டு, கெளரி முஞ்ஞாலை ஹீரோயினாக்கி, தொட்டால் பூ மலரும் படத்தை இயக்கி மகனின் கலையுலக வாழ்க்கையை தொடங்கி வைத்தார்.

தொட்டால் பூ மலரும் படத்தில் சாக்லேட் பாயாக வந்து போன ஷக்தி இப்போது அதிரடி ஆக்ஷன் நாயகனாக அவதாரம் எடுக்கவுள்ளார்.

முதல் படமே வெற்றிப் படமானதால் ஷக்தி பரம சந்தோஷமாக உள்ளார். இதனால் அடுத்து அதிரடி நாயகனாக தன்னை சோதித்துப் பார்க்க ஆவலாக உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதல் படத்தில் சாப்ட் கேரக்டரில் நான் வந்து போனதை பலரும் ரசித்தனர். அடுத்து நான் அதிரடி வேடத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன்.

ஆக்ஷன் ரோல் செய்வது சாதாரண விஷயம் இல்லை. இருந்தாலும் அதையும் என்னால் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். வழக்கமான அதிரடிப்படமாக இல்லாமல், நூற்றுக்கணக்கான பேரை ஒரே ஆள் அடித்து துவைப்பது போல இல்லாமல் இந்தப் படம் வித்தியாசமானதாக இருக்கும் என்றார் ஷக்தி.

ஷக்தியின் இந்த ஆக்ஷன் படத்தை யார் இயக்கப் போவது என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்தப் படமும், தொட்டால் பூ மலரும் போல ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் ஷக்தி உள்ளார்.

தற்போது பி.வாசு, தெலுங்கில் மோகன்பாபுவின் மகன் விஷ்ணுவை வைத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதை முடித்து மீண்டும் தமிழுக்குத் திரும்புகிறார்.

Read more about: film sakthi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil