»   »  சல்மான் தனது காதலி லூலியாவை பிரிந்துவிட்டாராம்: காரணத்தை மட்டும் கேட்காதீங்க!

சல்மான் தனது காதலி லூலியாவை பிரிந்துவிட்டாராம்: காரணத்தை மட்டும் கேட்காதீங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான், லூலிய வன்டூர் காதல் முறிந்துவிட்டதாம்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இன்னும் சில நாட்களில் 50 வயதாகப் போகிறது. அவரது தம்பி, தங்கைகள் எல்லாம் திருமணமாகி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் சல்மான் கான் மட்டும் இன்னும் சிங்கிளாகவே உள்ளார்.

இருப்பினும் அவர் வாழ்வில் காதல் ஒன்றும் வராமல் இல்லை.

காதல்

காதல்

சல்மான் கான் வாழ்வில் ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப் உள்பட பல காதலிகள் வந்தனர். ஆனால் யாரும் நிலையாக தங்கவில்லை. அவரின் அனைத்து காதலும் முறிந்தது.

லூலியா

லூலியா

ரோமானியாவைச் சேர்ந்த நடிகை லூலியா வன்டூரும், சல்மான் கானும் காதலிப்பதாக கூறப்பட்டது. மேலும் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாகவும் பாலிவுட்டில் பேச்சாக கிடந்தது.

மோதிரம்

மோதிரம்

சல்மான் கான் லூலியாவுக்கு அணிவித்த விலை உயர்ந்த மோதிரத்தை லூலியா புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டது தான் அவரது காதலுக்கு வேட்டு வைத்துள்ளது.

தங்கைகள்

தங்கைகள்

ரகசியமாக வைக்க வேண்டிய விஷயத்தை எல்லாம் இந்த லூலியா என்ன இப்படி தம்பட்டம் அடிக்கிறார் என சல்மானின் தங்கைகள் அல்விரா மற்றும் அர்பிதாவுக்கு கோபம் வந்ததாம். தங்களின் கோபத்தை சல்மானிடம் காண்பித்துள்ளனர்.

அடப்பாவமே

அடப்பாவமே

சல்மானுக்கு தான் தங்கைகள் என்றால் உயிராச்சே. இந்நிலையில் தான் அவர் லூலியாவை பிரிந்துள்ளார். அடப்பாவிகளா இந்த காரணத்திற்காகவா சல்மான் தனது காதலியை பிரிந்துள்ளார் என்று பாலிவுட்காரர்கள் வியக்கிறார்கள்.

English summary
Apart from his movies, Salman Khan also remains in news for his famous affairs and according to the recent reports, Salman and his rumoured girlfriend Iulia Vantur have parted ways.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil