»   »  'மெழுகு' சல்மான் சிலை திறப்பு

'மெழுகு' சல்மான் சிலை திறப்பு

Subscribe to Oneindia Tamil
Salman Khan

லண்டனில் உள்ள பிரபலமான மேடம் டுஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் முழு உருவ மெழுகுச் சிலை திறந்து வைக்கப்பட்டது. தனது சிலையை சல்மானே திறந்து வைத்தார்.

லண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாத் மியூசியம் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. உலகப் புகழ் பெற்ற பல தலைவர்கள், பிரபலங்களின் சிலைகள் இங்கு நிழலாக நிற்கின்றன.

மகாத்மாகாந்தி, இந்திரா காந்தி, ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் சிலைகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.

இந்த வரிசையில் நடிகர் சல்மான் கானின் சிலையும் இந்த மியூசியத்தில் இடம் பிடித்துள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் இந்த முழு உருவ மெழுகுச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை நடிகர் சல்மான் கானே நேரில் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

சிலை அப்படியே தன்னைப் போலவே தத்ரூபமாக இருப்பதாகவும் அவர் ஆச்சரியப்பட்டுக் கூறினார். அவருடன் தோழியும், நடிகையுமான காத்ரீனா கைபும் உடன் சென்றிருந்தார்.

டுஸ்ஸாத் மியூசியம் நிர்வாகிகளுக்கு, இந்தியாவின் வட பகுதிகளில் மட்டும் பிரபல தலைவர்கள், பிரபலங்கள் இல்லை, நாட்டின் பிற பகுதிகளிலும் அப்படிப்பட்ட சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை யாராவது எடுத்துக் கூறினால் தென்னிந்தியாவைச் சேர்ந்த மாபெரும் மனிதர்கள் பலரின் சிலைகளும் அங்கே இடம் பெறக் கூடும்!

Please Wait while comments are loading...