»   »  தனியே தன்னந்தனியே... 500 கோடி கிளப்பை அசால்ட்டா திறந்து வைத்த சல்மான் கான்

தனியே தன்னந்தனியே... 500 கோடி கிளப்பை அசால்ட்டா திறந்து வைத்த சல்மான் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது பஜ்ரங்கி பைஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் 500 கோடி கிளப்பைத் திறந்து வைத்த பெருமைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கிறார் சல்மான் கான்.

பாலிவுட்டினர் ஆரம்பித்து வைத்த 100 கோடி கிளப் நமது கோலிவுட்டினரையும் விட்டு வைக்கவில்லை. எப்பொழுதுமே 100 கோடி கிளப் படங்களுக்கும் அதில் நடித்த நடிக, நடிகையருக்கும் தனி அங்கீகாரம் கிடைக்கும்.

இந்நிலையில் தனது படங்களின் மூலமாக 500 கோடி கிளப்பை புதிதாக ஆரம்பித்து வைத்திருக்கிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான்.

100 கோடி கிளப்

100 கோடி கிளப்

100 கோடியை வசூல் செய்யும் படங்களை 100 கோடி கிளப்பில் இணைத்து வைத்து அழகு பார்ப்பது பாலிவுட்டினர் வழக்கம். பாலிவுட்டில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவின் படங்கள் வரிசையாக 100 கோடிகளை குவித்ததால் 100 கோடிகளின் நாயகி என்ற செல்லப்பெயர் தீபிகாவுக்கு உண்டு.

சல்மான் கான்

சல்மான் கான்

49 வயதாகும் சல்மான் கானின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி மரியாதை எப்பொழுதும் உண்டு. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சர்வசாதாரணமாக 100 கோடி பட்டியலில் இடம்பிடித்து வந்தது.

300 கோடி

300 கோடி

எத்தனை நாட்களுக்கு 100 கோடி பட்டியலில் இருப்பது என்று நினைத்தாரோ என்னவோ தனது அடுத்தடுத்த படங்களான ஏக் தா டைகர், கிக், தபாங் 2 மற்றும் ஜெய் கோ போன்ற படங்களின் மூலமாக 300 கோடி கிளப் என்ற ஒன்றை தனி ஆளாக சல்மான் உருவாக்கினார்.

மாற்றம் முன்னேற்றம்

மாற்றம் முன்னேற்றம்

மாற்றம் முன்னேற்றம் என்பது போல அடுத்ததாக 500 கோடி கிளப் ஒன்றைத் திறந்து வைத்திருக்கிறார் சல்மான் கான். இவரின் நடிப்பில் இந்த வருடம் வெளியான பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் 500 கோடிப் பட்டியலில் இணைந்தது. அடுத்ததாக இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரேம் ரத்தன் தன் பாயோ திரைப்படம் தற்போது 500 கோடிப் பட்டியலில் இணையக் காத்திருக்கிறது.

தனியே தன்னந்தனியே

தனியே தன்னந்தனியே

எது எப்படியோ ஒரே வருடத்தில் 2 படங்கள் அடுத்தடுத்து 500 கோடியை வசூலிப்பதன் மூலம் பாலிவுட் ஏன் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் 500 கோடி கிளப்பை திறந்து வைத்த பெருமைக்குரியவராக சல்மான் கான் மாறுவது மட்டும் உறுதி.

English summary
Salman Khan creates history with more than 500 crores box office collection in one year. Bajrangi Bhaijaan and Prem Ratan Dhan Payo Salman has entered the league of making more than 500 crores in a single year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil