»   »  சப்புன்னு அறைஞ்சிடுவேன்: இளம் ஹீரோவை மிரட்டிய சூப்பர் ஸ்டார்

சப்புன்னு அறைஞ்சிடுவேன்: இளம் ஹீரோவை மிரட்டிய சூப்பர் ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அங்கிள் என்று அழைத்தால் சப்பென்று அறைந்துவிடுவேன் என சல்மான் கான் தன்னை மிரட்டியதாக பாலிவுட் நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் டேவிட் தவானின் மகனும், நடிகருமான வருண் தவான் ஜுத்வா 2 படத்தில் நடித்து வருகிறார். 1997ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் டேவிட் தவான் இயக்கத்தில் வெளியான ஜுத்வா படத்தின் இரண்டாம் பாகம் இது.

இந்த படத்தில் வருண் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். படம் குறித்து வருண் கூறுகையில்,

சல்மான்

சல்மான்

சல்மான் கான் ஜுத்வா படத்தில் நடித்தபோது எனக்கு 7 வயது. ஒரு நாள் நான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சல்மானை பார்த்ததும் அங்கிள் என்று அழைத்தேன்.

அறை

அறை

நான் சல்மானை அங்கிள் என்றதும் அவருக்கு கோபம் வந்துவிட்டது. சப்பென்று அறைந்துவிடுவேன். மரியாதையாக சல்மான் பாய்(அண்ணா) என்று கூப்பிடு. அங்கிள் என்றால் தியேட்டருக்குள் விட மாட்டேன் என்றார்.

பாய்

பாய்

அன்றைய தினத்தில் இருந்து நான் சல்மான் கானை பாய் என்று தான் அழைக்கிறேன். ஜுத்வா படப்பிடிப்பின்போது நடந்த பல சம்பவங்கள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

படம்

படம்

ஜுத்வா படப்பிடிப்பு மொரீஷியஸில் நடந்தது. நான் சின்னப் பையன் என்பதால் படப்பிடிப்பு நடக்கிறது என்று தெரியாமல் ஜாலியாக விடுமுறையை கழிக்க அனைவரும் வந்ததாக நினைத்தேன் என வருண் தவான் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor Varun Dhawan said, 'I called him Salman uncle and he got very upset. He said, 'I will slap you. You should call me Salman bhai.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil