»   »  உங்களை வெறுக்கிறேன் ஆமீர் கான்: ஓபனாக தெரிவித்த சல்மான் கான்

உங்களை வெறுக்கிறேன் ஆமீர் கான்: ஓபனாக தெரிவித்த சல்மான் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தங்கல் படத்தை பார்த்த சல்மான் கான் நடிகர் ஆமீர் கானை வெறுப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆமீர் கான் நடிப்பில் மிரட்டியிருக்கும் தங்கல் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்ப்பவர்கள் எல்லாம் இது வேற லெவல், ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தங்கல் படத்தின் ஸ்பெஷல் ஷோவை பாலிவுட் நடிகர் சல்மான் கானின் குடும்பத்தார் நேற்று மாலை பார்த்துள்ளனர்.

தங்கல்

தங்கல்

தங்கல் படத்தில் ஆமீர் கான் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். படத்தை பார்த்த சல்மான் கானின் குடும்பத்தார் தங்கல் சல்மானின் சுல்தான் படத்தை விட சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சல்மான்

சல்மான்

சுல்தான் படத்தில் சல்மான் கான் மல்யுத்த வீரராக நடித்திருந்தார். தனது குடும்பத்தார் ஆமீர் கானின் படத்தை எக்ஸ்ட்ராவாக புகழ்ந்ததால் சல்மானுக்கு ஒரு பக்கம் பொறாமை ஒரு பக்கம் மகிழ்ச்சி.

ஆமீர் கான்

சல்மான் கான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இன்று மாலை தங்கல் படத்தை என் குடும்பத்தார் பார்த்தார்கள். அது சுல்தானை விட நல்ல படம் என்று நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் உங்களை விரும்புகிறேன் ஆமீர் ஆனால் தொழில் ரீதியாக வெறுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

படம்

படம்

சல்மானின் சுல்தான் உலக அளவில் ரூ. 584 கோடி வசூல் செய்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த சாதனையை ஆமீர் கானின் தங்கல் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Bollywood actor Salman Khan tweeted that, “My Family saw #Dangal today evening and thought it was a much better film than #Sultan. Love u personally Aamir but hate u professionally ! (sic).”
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil