»   »  “பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போல் வலியை அனுபவித்தேன்”... சர்ச்சையில் சிக்கிய சல்மான்

“பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போல் வலியை அனுபவித்தேன்”... சர்ச்சையில் சிக்கிய சல்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சுல்தானில் மல்யுத்த போட்டிக் காட்சிகளில் நடித்ததன் மூலம், பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப் போல் வலியை உணர்கிறேன் எனக் கருத்துத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான்கான்.

சுல்தான் படத்தில் சுல்தான் அலிகான் என்ற மல்யுத்த வீரராக சல்மான் நடித்துள்ளார். சுல்தானை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்க ஆதித்ய ராய் சோப்ராவின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தில் சல்மானின் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடித்துள்ளார். கதைப்படி இவரும் ஒரு மல்யுத்த வீராங்கனை. காதல் கதையில் மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையும் சேர்த்து இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளதாம்.

 சிறப்பு பயிற்சிகள்...

சிறப்பு பயிற்சிகள்...

இந்தப் படத்திற்காக சல்மானும், அனுஷ்காவும் பல சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டனர். முக்கியமாக ஆறு வாரங்கள் மல்யுத்த பயிற்சி எடுத்த பிறகே அனுஷ்கா நடிக்க வந்தார்.

 லங்கோடு மட்டும்...

லங்கோடு மட்டும்...

அதேபோல், பல படங்களில் சட்டையில்லாமல் நடித்த சல்மான் இந்தப் படத்தில் வெறும் லங்கோடு மட்டும் அணிந்து நடித்துள்ளார். வெறும் லங்கோடுடன் ஆயிரக்கணக்கான ஜனங்களின் மத்தியில் நடித்த போது அழுகையை அடக்கிக் கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

 டிரெய்லர்...

டிரெய்லர்...

சுல்தானின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இரண்டே நாளில் 52 லட்சம் பார்வையாளர்களை ட்ரெய்லர் பெற்றது. இந்த ஆர்வம் படம் பார்ப்பதிலும் இருந்தால் சுல்தான் இந்தியாவில் மட்டும் 300 கோடியை தாண்டும் என்பது நிபுணர்களின் கருத்து.

 சர்ச்சைப் பேட்டி...

சர்ச்சைப் பேட்டி...

ரம்ஜானை முன்னிட்டு ஜுலை முதல் வாரத்தில் சுல்தான் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், சர்ச்சைகளுக்குப் பேர் போன சல்மான், சுல்தான் பட அனுபவம் குறித்த பேட்டியில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களைப் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 பலாத்காரம்...

பலாத்காரம்...

அந்தப் பேட்டியில் அவர், படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த பிறகு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப் போன்று வலியை உணர்ந்தேன். என்னால் நேராக நடக்கக்கூட முடியவில்லை' என சல்மான் கூறியிருந்தது தான் சர்ச்சைக்குக் காரணம்.

 ஷூட்டிங்...

ஷூட்டிங்...

அதாவது, மல்யுத்த போட்டி தொடர்பான காட்சிகளைப் படமாக்கியபோது, சுமார் 120 கிலோ எடை கொண்ட வீரரை கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட முறை மேலே தூக்குவது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். பல்வேறு கோணங்களில் இந்த காட்சி எடுக்கப்பட்டதாம்.

உடல்வலி...

அதோடு பலமுறை அந்த வீரரோடு சல்மான் மோதுவது போன்ற காட்சிகளும், அவரை தூக்கி வீசுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட உடல்வலியைத் தான் அப்படிக் குறிப்பிட்டுள்ளார் சல்மான்.

எதிர்ப்பு...

சல்மானின் இந்த பேட்டி, சமூகவலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெண் ரசிகர்களை அதிகளவில் கொண்ட சல்மான் இப்படியான கருத்தைத் தெரிவித்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மறுப்பு...

இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தான் தவறான நோக்கத்தில் அப்படிக் கூறவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார் சல்மான்.

வெறுப்பை சம்பாதிப்பார்...

டிவிட்டுகளுக்குப் பெயர் போன கப்பார் சிங்கும் இதுகுறித்து தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார். சல்மான் கானின் இந்தப் பேச்சால் பல சர்ச்சைகளையும், வெறுப்பையும் அவர் சம்பாதிக்கப் போகிறார் என்று கப்பார் தனது டிவிட்டில் கூறியுள்ளார்.

English summary
To social media's dismay, actor Salman Khan has apparently said that training for his wrestling movie Sultan left him feeling like a 'raped woman.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil