»   »  வேண்டாம் வேண்டாம் கத்ரீனா வேண்டவே வேண்டாம்: சல்மான் கான் அடம்

வேண்டாம் வேண்டாம் கத்ரீனா வேண்டவே வேண்டாம்: சல்மான் கான் அடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது முன்னாள் காதலியும் நடிகையுமான கத்ரீனா கைஃபுடன் சேர்ந்து விளம்பர படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

லண்டனில் இருந்து மும்பை வந்த கத்ரீனா கைஃப் சல்மான் கான் உதவியோடு பாலிவுட்டில் வளர்ந்தார். சில காலம் சல்மானின் கைகோர்த்து அவரது காதலியாக வலம் வந்தார் கத்ரீனா. அதன் பிறகு சல்மானை பிரிந்து சென்ற கத்ரீனா நடிகர் ரன்பீர் கபூரின் காதலியாகிவிட்டார்.

கத்ரீனா ரன்பீரின் காதலியான பிறகு அவரிடம் இருந்து விலகியே உள்ளார் சல்மான்.

சல்மான்

சல்மான்

விளம்பர படம் ஒன்றில் கத்ரீனா கைஃபூடன் சேர்ந்து நடிக்குமாறு சல்மான் கானிடம் கேட்டுள்ளனர். அந்த விளம்பர படத்தில் நடிக்க அவருக்கு ரூ.7 கோடியை சம்பளமாக தருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் சல்மானோ கத்ரீனாவுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கறாராக தெரிவித்துவிட்டார்.

பஜ்ரங்கி பாய்ஜான்

பஜ்ரங்கி பாய்ஜான்

சல்மான் கான் கபீர் கான் இயக்கத்தில் பஜ்ரங்கி பாய்ஜான் என்ற இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் கபீர் கானுக்கு நெருக்கமான கத்ரீனா நடிப்பதாக இருந்தது என்றும், சல்மான் கூறி தான் கரீனா கபூர் நடிக்க வைக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

கத்ரீனா

கத்ரீனா

யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சல்மான் கான் நடிக்கும் படம் சுல்தான். இந்த படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரீனாவை நடிக்க வைக்க நினைத்துள்ளனர். சல்மான் கத்ரீனா வேண்டாம் என்று கூறியதால் வேறு ஒரு நடிகையை ஹீரோயின் ஆக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.

காதல் முறிவு

காதல் முறிவு

கத்ரீனா ஒரு காலத்தில் என் தோழியாக இருந்தார். தற்போது வேறு ஒருவரின் தோழியாகிவிட்டார். அதை மதித்து அவரிடம் இருந்து விலகியே இருக்கிறேன். நாளை யாராவது அவரைப் பார்த்து ஓ, நீங்கள் இன்னும் சல்மானுடன் தொடர்பில் உள்ளீர்களா என்று கூறிவிடக் கூடாது பாருங்கள் என்று சல்மான் தெரிவித்துள்ளார்.

English summary
Salman Khan recently rejected a 7 crore ad offer opposite Katrina Kaif. Salman Khan was offered Rs 7 crore to work in that ad.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil