»   »  விருது விழாவுக்காக ஒன்று சேரும் எதிரிகளாக இருந்து நண்பேன்டா ஆன 2 ஹீரோக்கள்

விருது விழாவுக்காக ஒன்று சேரும் எதிரிகளாக இருந்து நண்பேன்டா ஆன 2 ஹீரோக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை:  எதிரிகளாக இருந்து அண்மையில் நண்பேன்டாவாகியிருக்கும் சல்மான் கானும், ஷாருக்கானும் சேர்ந்து ஒரு விருது விழாவை தொகுத்து வழங்க உள்ளனர்.

பாலிவுட்டை ஆண்டு வருவது மூன்று கான்கள். அவர்கள் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர் கான். மூன்று பேருமே ரூ.100 கோடி வசூல் படங்கள் கொடுத்து வருகிறார்கள்.

Salman, Shah Rukh Khan to host an award function together

இதில் சல்மானுக்கும், ஷாருக்கானுக்கும் ஆகாது. அண்மை காலமாக அவ்வப்போது பொது இடங்களில் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் தான் எதிரிகளாக இருந்து அண்மையில் நண்பேன்டாவாகியிருக்கும் சல்மானும், ஷாருக்கானும் சேர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர். இருவரையும் சேர்த்து பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

ஷாருக்கான், அனுஷ்கா சர்மா நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சல்மான் கான் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood biggies Salman Khan and Shah Rukh Khan are going to host an award function together.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil