காதல் மலர்ந்தது பற்றி உருகி பேசிய சமந்தாவின் முன்னாள் கணவர்.. கொதிப்பில் ரசிகர்கள்.. என்னெல்லாம் பேசிருக்காரு?

ஹைதராபாத்: நாகார்ஜுனாவின் மூத்த மகனும், நடிகருமான நாக சைதன்யா முதலில் சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண உறவு பாதியில் முறிந்தது. அதனையடுத்து நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று சாம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாகார்ஜுனாவும் டோலிவுட்டில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். வெற்றி, தோல்வி என இரண்டையும் பார்த்துவரும் அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கின்போது தனக்கு ஜோடியாக நடித்த சமந்தாவை காதலித்தார். அவர்களது காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு அவர்களது திருமணம் நடந்தது.

பிரிந்த சைதன்யா: திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்துவந்தார். அதற்கு நாக சைதன்யாவும் சப்போர்ட்டாகத்தான் இருந்தார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இரண்டு பேருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. அந்த மனஸ்தாபம் நாளடைவில் பெரிதாகி பெரிதாகி விவாகரத்தில் சென்று முடிந்தது. அவர்கள் விவாகரத்து செய்துகொண்டதற்கு பலரும் பல கதைகளை சொல்லிவருகிறார்கள்.

Samantha s ex-husband Naga Chaitanya opens up about how he fell in love with Sobitha Dhulipala
Photo Credit:

இரண்டாவது திருமணம்: சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. முதல் திருமண முறிவால் மன உளைச்சலில் இருந்த தனது மகனின் வாழ்க்கையை சீர் செய்ய இந்தக் காதல் உதவும் என்று நம்பிய நாகார்ஜுனா, இந்தக் காதலுக்கும் சம்மதம் தெரிவித்தார். பிறகு பிரமாண்டமாக கடந்த வருடத்தில் சைதன்யாவின் இரண்டாவது திருமணம் நடந்தது.

சைதன்யாவின் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நாக சைதன்யா. அப்போது தனது மனைவி சோபிதா குறித்து பேசிய அவர், "எனது மனைவி சோபிதா துலிபாலா இல்லாமல் என்னால் இருக்க முடியாது. சோபிதாவுக்கும் எனக்குமான காதல் இன்ஸ்டாகிராமில்தான் தொடங்கியது. எனது இன்ஸ்டா பதிவு ஒன்றுக்கு அவர் பதிலளித்திருந்தார். அப்போதிருந்து நாங்கள் பேச ஆரம்பித்துக்கொண்டோம். அது பின்நாட்களில் காதலாக மாறியது" என்றார்.

கோபத்தில் சாம் ரசிகர்கள்: அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது மட்டுமின்றி சமந்தா ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பேட்டியை பார்த்த அவர்கள், 'இதேபோன்றுதான் சமந்தாவை திருமணம் செய்திருந்தபோதும் ஏகப்பட்ட விஷயங்களை அவர் பேசினார். ஆனால் பாதியிலேயே வெளியேறிவிட்டார். அவரால்தான் சமந்தாவின் கரியரே போய்விட்டது" என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

இதற்கிடையே சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அதேசமயம் அவரும் இயக்குநர் ராஜுவும் டேட்டிங் செய்துவருவதாக கூறப்படுகிறது. அவர்கள் இணைந்து வெளிநாடுகளுக்கும் சென்றுவருகிறார். எனவே அவர்களுக்குள் திருமணம் நடக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சமந்தா என்ன மனநிலையில் இருக்கிறாரோ தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X