‘’மூணு முப்பதி மூணு’’ படத்தில் நடிக்க ரொம்ப பயந்தேன்.. மனம் திறந்த சாண்டி !
சென்னை : மூணு முப்பத்தி மூணு திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சாண்டி பல சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
அமானுஷ்யம் நிறைந்த த்ரில்லர் திரைப்படமான மூணு முப்பதி மூணு அக்டோபர் 21 அன்று திரையரங்கில் வெளியாக உள்ளது
வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படத்தை டைரக்டர் நம்பிக்கை சந்த்ரு இயக்கி உள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன்
இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சாண்டி, சரவணன், ரமா, ரேஷ்மா பசுபெலட்டி, மைம் கோபி மற்றும் ஷ்ருதி செல்வம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர். பாம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜீவிதா கிஷோர் படத்தை தயாரித்துள்ளார்.

நம்பிக்கை அளித்தார்
படம் ஆரம்பிக்கும் போது கதாபாத்திரத்தோடு இணைந்து நடிக்க நான் ரொம் பயந்தேன். நம்பிக்கை சந்துரு தான் எனக்கு நம்பிக்கை அளித்து இப்படத்தில் என்னை நடிக்க வைத்தார். இப்படம் வெளியாவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட தயாரிப்பாளர் ஜீவிதா கிஷோர் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்று சாண்டி கூறினார்.

ஸ்ருதி நல்ல நடிப்பு
ஸ்ருதி நம்பமுடியாத அளவிற்கு சிறப்பான நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவரது நடிப்பு அசாதாரணமானது. இசை இயக்குனர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் ஒரு அசாதாரண திறமைசாலி . அவரது மறு பதிவு வேலை அற்புதமாக உள்ளது என்று மூணு முப்பத்தி மூணு திரைப்படம் குறித்து அழகாக பேசினார்.

யுஏ சான்றிதழ்
திக்... திக்... என திகில் கலந்த படம் இது. திக் திக் என காட்சிக்கு காட்சி திகில் அதிகரித்துக்கொண்டே போகும் இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











