»   »  சல்மான் கான் சரியான திமிர் பிடிச்சவர்: ஊரெல்லாம் கூறி வரும் பிரபல நடிகர்

சல்மான் கான் சரியான திமிர் பிடிச்சவர்: ஊரெல்லாம் கூறி வரும் பிரபல நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கான் சரியான திமிர் பிடித்தவர் என்று பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பலரிடமும் கூறி வருகிறாராம்.

பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத்தும், சல்மான் கானும் அண்ணன், தம்பி போன்று பழகுவார்கள். இது பாலிவுட்டுக்கே தெரியும். இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

Sanjay Dutt calls Salman Khan arrogant

சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் தத்துக்கு பட வாய்ப்புகள் இல்லை. அதனால் அவர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் சல்மான் கானை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்து அவரிடம் கேட்டார்.

சல்மான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் படுபிசியாக இருப்பதால் சஞ்சய்க்கு நேரடியாக பதில் அளிக்காமல் ஆள் மூலம் தெரிவித்தார். இதனால் சஞ்சய் தத்துக்கு சல்மான் மீது கடும்கோபம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் இந்த சல்மான் சரியான திமிர் பிடிச்சவர் தெரியுமா என்று கூறி வருகிறாராம்.

English summary
Bollywood actor Sanjay Dutt is telling people that his buddy Salman Khan is arrogant. He is saying so after Salman refused to act in his home production.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil