twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தண்டனையை ஏற்பதாகக் கூறி கண்ணீர் விட்ட சஞ்சய் தத், இப்போது ரத்து செய்யக் கோருகிறார்!!

    By Shankar
    |

    சென்னை: மும்பை வெடிகுண்டு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் நடிகர் சஞ்சய் தத்.

    1993-ம் ஆண்டு மும்பையில் 258 உயிர்களைப் பலி கொண்ட பயங்கரமான தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுதம் பதுக்கியதற்காக கைது செய்யப்பட்டவர் நடிகர் சஞ்சய் தத்.

    தடா நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் சஞ்சய் தத் மீதான குற்றச்சாட்டை வலுவான சாட்சியங்கள் மூலம் நிரூபித்திருந்தனர். இந்த வழக்கில் மும்பை தடா நீதிமன்றம் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது சஞ்சய் தத்துக்கு.

    இதை எதிர்த்து சஞ்சய்தத் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த அப்பீல் மனு மீது உச்சநீதி மன்றம் கடந்த மாதம் 21-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

    Sanjay Dutt files review petition against SC judgement

    சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு ஜெயில் தண்டனையை 5 ஆண்டாக குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. சஞ்சய்தத் ஏற்கனவே 18 மாதம் சிறை தண்டனை அனுபவித்து விட்டார். மீதி காலமான 3.5 ஆண்டுகள் அவர் ஜெயில் தண்டனை பெறவேண்டும்.

    தீர்ப்புபடி அவர் கடந்த 18-ந் தேதி கோர்ட்டில் அடைய வேண்டும். ஆனால் சரண் அடைய அவர் 6 வார காலம் அவகாசம் கேட்டு இருந்தார். அதன்படி உச்சநீதிமன்றம் கடந்த 17-ந்தேதி சஞ்சய் தத்துக்கு 4 வாரம் அவகாசம் அளித்தது.

    இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து சஞ்சய்தத் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் உள்ள சட்ட நிபுணர்கள் குழு சஞ்சய்தத் சார்பில் இந்த மறு ஆய்வு மறுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.

    இந்த மறு ஆய்வு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால் சஞ்சய்தத் மே 18-ந்தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

    உச்சநீதி மன்ற தண்டனை அறிவிப்பு வந்தபோது, கண்ணீர் விட்டபடி, நான் இந்த தண்டனையை ஏற்கிறேன். எதிர்த்து மேல் முறையீடு செய்ய மாட்டேன் என்று மீடியா முன் கூறினார் சஞ்சய் தத். ஆனால் சரணடையாமல் அவகாசம் கேட்டார்.

    இப்போது தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு செய்துள்ளார். நிரூபிக்கப்பட்ட குற்றத்துக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏற்காமல், தனது செல்வாக்கை வைத்து மீண்டும் மீண்டும் இழுத்தடிக்க முயல்வதாக சஞ்சய் தத் மீது விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

    சஞ்சய் தத்திற்கு 'திடீர்' பிடிவாரண்ட்:

    இந் நிலையில் நடிகர் சஞ்சய் தத்தை கைது செய்யும்படி, ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை மும்பை அந்தேரி நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

    பாலிவுட் தயாரிப்பாளர் ஷகீல் நூராணி என்பவர் 'ஜான் கி பாசி' என்ற படத்தை தயாரிக்க கடந்த 2002ம் ஆண்டு திட்டமிட்டார். இப்படத்தில் சஞ்சய் தத், பிரியங்கா சோப்ரா ஆகியோரை கதாநாயகன்- கதாநாயகியாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    சஞ்சய் தத்திற்கு முன் பணமாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. படத் தயாரிப்பு பணிகள் பாதி முடிந்த நிலையில் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க சஞ்சய் தத் மறுத்து விட்டார்.

    இதையடுத்து ஷகீல் மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சஞ்சய் தத்தின் வீடு, அலுவலகம் ஆகியவற்றை முடக்க உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு பிறகு ஷகீல் நூராணி அந்தேரி நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார். இம்மனுவின் மீது கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை நடத்திய நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க சஞ்சய் தத் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சஞ்சய் தத் ஆஜராகாததால், அவரை கைது செய்து கோர்ட்டில் நிறுத்தும்படி, ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட்டை மாஜிஸ்திரேட் பிறப்பித்துள்ளார்.

    English summary
    Days after being granted one more month to surrender, actor Sanjay Dutt has filed a review petition in the Supreme Court challenging his conviction and five-year jail term in the 1993 Mumbai serial blasts case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X