»   »  தமிழுக்கு வந்த புது வில்லன்

தமிழுக்கு வந்த புது வில்லன்

Subscribe to Oneindia Tamil

புதுப் புது ஹீரோக்களும், ஹீரோயின்களும் அறிமுகமாகும் நிலையில், புதுசு புதுசாக வில்லன்களும் வந்து குவிந்தபடி உள்ளனர். அப்படிப் புதுசாக வந்த வில்லன்தான் சஞ்சித்.


எஸ்.ஜே.சூர்யாவின் வியாபாரி படத்தின் வில்லன்தான் சஞ்சித். தமிழ் சினிமாவுக்கேற்ற வாகான வில்லனாக இருக்கிறார். முன்னணி டிவி சீரியல் தயாரிப்பாளர் அபிநயா கிருஷ்ணசாமியின் மகன்தான் சஞ்சித்.

டிவி தயாரிப்பில் அப்பா உள்ளதால், சஞ்சித்துக்கு சினிமா குறித்த அறிவும் நன்றாகவே உள்ளது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக தான் பார்த்து வந்த கஸ்டம்ஸ் வேலையை உதறி விட்டாராம் சஞ்சித்.

வியாபாரி படத்தில் இவரது நடிப்பைப் பார்த்து வியந்த சுரேஷ்கிருஷ்ணா, தான் இயக்கிய பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்திலும் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

வில்லனாக அறிமுகமாகிய சஞ்சித் இப்போது நாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். பத்து பத்து என்கிற புதிய படத்தின் நாயகன் சஞ்சித்தான். இது ஒரு திரில்லர் கதையாம்.

மகன் ஓரளவு அடையாளம் தெரிய ஆரம்பித்து விட்டதால் சஞ்சித்தை வைத்து புதிதாக ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறாராம் கிருஷ்ணசாமி.

தந்தை மகனுக்காற்றும் உதவி!

Please Wait while comments are loading...