»   »  நானும் லீடிங் ஹீரோவாச்சே... ஹன்சிகா, தமன்னாவுக்கு வலைவீசும் சந்தானம்!

நானும் லீடிங் ஹீரோவாச்சே... ஹன்சிகா, தமன்னாவுக்கு வலைவீசும் சந்தானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தில்லுக்கு துட்டு பட ஹிட் மூலம் ஹீரோவாக ஃபார்மாகிவிட்டார் சந்தானம். அடுத்து செல்வராகவன் படத்தில் நடிப்பதன் மூலம் முன்னணி ஹீரோக்கள் லிஸ்டிலும் இடம்பெற்றுவிட்டார். ஆனால் ஒரே ஒரு குறை மட்டும் நீடிக்கிறது. அது முன்னணி ஹீரோயின்களுடன் இன்னும் ஜோடி சேராதது...

Santhanam approaches leading heroines

இப்போது நடித்துக்கொண்டிருக்கும் இரண்டு படங்களுக்கே முன்னணி ஹீரோயின்களைக் கேட்டு பார்த்தனர். அவர்கள் யாரும் ஓகே சொல்லாததால் அறிமுக நாயகிகளையே ஜோடியாக்க வேண்டியதானது. ஆனால் தில்லுக்கு துட்டு தந்த கமர்ஷியல் வெற்றி முன்னணி ஹீரோயின்களை சந்தானம் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா? மணிகண்டன் அடுத்து சந்தானத்தை வைத்து இயக்கும் படத்தில் கண்டிப்பாக முன்னணி ஹீரோயின் தானாம். ஹன்சிகா, தமன்னா இருவரையும் அப்ரோச் செய்து வருகிறார்கள். தமன்னா கிடைப்பது கஷ்டம். ஆனால் ஹன்சிகாவுக்கு கையில் படங்கள் இல்லாத்தால் ஓகே சொல்வார் என்று நம்புகிறார்கள்.

English summary
Sources say that Santhanam is approaching Tamanna and Hansika for his next movie as heroines
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil