»   »  'ஐ ஆம் இம்பிரஸ்ட்': இப்படி 'டான்ஸர்' சிம்புவையே சொல்ல வைத்த சந்தானம்

'ஐ ஆம் இம்பிரஸ்ட்': இப்படி 'டான்ஸர்' சிம்புவையே சொல்ல வைத்த சந்தானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சக்க போடு போடு ராஜா படத்தில் சந்தானம் சூப்பராக டான்ஸ் ஆடி சிம்புவையே இம்பிரஸ் செய்துள்ளாராம்.

Select City
Buy Sakka Podu Podu Raja (U/A) Tickets

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படம் சக்க போடு போடு ராஜா. சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். நண்பேன்டா சந்தானத்திற்காக சிம்பு இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.


படத்தை விடிவி கணேஷ் தயாரிக்கிறார். படத்தில் வரும் இரண்டு பாடல்களை ஜார்ஜியாவில் படமாக்கிவிட்டு சந்தானம் சென்னை திரும்பியுள்ளார்.


டான்ஸ்

டான்ஸ்

சிம்பு மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லிவிடுவார். அவர் இரண்டு மாதங்களாக பாடல்களுக்காக நேரம் செலவிட்டதால் ஜார்ஜியாவில் எடுத்த பாடல் காட்சிகளை அவரிடம் போட்டுக் காண்பித்தோம் என்கிறார் விடிவி கணேஷ்.


சந்தானம்

சந்தானம்

ஜார்ஜியாவில் படமாக்கப்பட்ட பாடல்களுக்கு சதீஷ் தான் டான்ஸ் மாஸ்டர். பாடல் காட்சிகளை பார்த்துவிட்டு சிம்பு இம்பிரஸ் ஆகிவிட்டார். பாடல்களுக்கு அருமையாக ஆடியிருக்கிறீர்கள் என்று சிம்பு சந்தானத்தை பாராட்டினார் என்று கணேஷ் தெரிவித்துள்ளார்.


வாசுதேவ்

வாசுதேவ்

சிறு சிறு பொழுதில் பாடல் மூலம் பாடகர் உன்னிகிருஷ்ணனின் 16 வயது மகன் வாசுதேவ் கிருஷ்ணன் பாடகர் ஆகியுள்ளார். இந்த பாடலை வாசுதேவ் தான் பாட வேண்டும் என்று சிம்பு வலியுறுத்தினார் என கணேஷ் கூறியுள்ளார்.


பாடகர்

பாடகர்

வாசுதேவ் முதலில் பாடியபோது நன்றாக வரவில்லை. வேறு யாரையாவது பாடச் சொல்லலாமே என்று நான் கூட கூறினேன். ஆனால் சிம்புவோ அந்த பையனை பயிற்சி பெற்று வருமாறு கூறி ஒரு வாரம் கழித்து ரெக்கார்டிங் வைத்தார். அப்பொழுது பார்த்தால் வாசுதேவ் பாடியது திருப்தியாக இருந்தது என்கிறார் கணேஷ்.


English summary
Sakka Podu Podu Raja producer VTV Ganesh said that Simbu is impressed by Santhanam's dance movements.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil