»   »  ஆக்‌ஷனே இனி வேண்டாம்... அலறும் சந்தானம்!

ஆக்‌ஷனே இனி வேண்டாம்... அலறும் சந்தானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அலறும் சந்தானம்!

தமிழ் சினிமாவில் காமெடிக்கு சந்தானத்தை விட்டா ஆளில்லை என்ற நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. எந்த நேரத்தில் சந்தானம் சிவகார்த்திகேயனைப் பார்த்து ஹீரோவாக தனது பாதையை மாற்றினாரோ, தமிழ் சினிமாவே காமெடி வறட்சியில் மாட்டித் தவிக்கிறது. சந்தானமும் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சிரமப்பட்டு வருகிறார்.

மீண்டும் காமெடி பாதைக்கே வந்துவிடுமாறு சந்தானத்துக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஆனால் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சந்தானம் இப்போது செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார். சக்கபோடு போடு ராஜா பெரிய தோல்வியைத் தழுவியதால் இனி கதைகளை தேந்தெடுப்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளாராம். முக்கியமாக ஆக்‌ஷன் ரோல்கள் கொண்ட கதைகளைத் தவிர்க்கிறாராம்.

Santhanam says no to action scripts

மக்களுக்கு இப்போது தேவை கலகலவென சிரிக்க வைக்கும் படங்கள்தான். அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட்களைதான் விரும்புகிறாராம்.

நல்ல முடிவுதான்... அப்படியே அந்த சர்வர் சுந்தரத்தை வெளியில விட முயற்சிக்கலாமே!

English summary
Actor Santhanam has decided to avoidg action scripts after continous failures.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil