»   »  சந்தானம் இனி தனி காமெடியனாக நடிப்பாரா...?

சந்தானம் இனி தனி காமெடியனாக நடிப்பாரா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்தேகம்தான். அவர் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படங்களின் பட்டியலைப் பார்த்தால் இனி அவர் தனி காமெடியனாகக் களமிறங்க மாட்டார் என்றுதான் தோன்றுகிறது.

தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் வெற்றிப் பட நாயகர்களின் வரிசையில் இணைந்த சந்தானம், அடுத்தடுத்து புதிய படங்களில் நாயகனாக நடிக்க கையெழுத்திட்டு வருகிறார்.

Santhanam signs one more movie as hero

லேட்டஸ்டாக கண்ணா லட்டு தின்ன ஆசை பட இயக்குநர் மணிகண்டனுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தை பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைத் தயாரித்த வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரிக்கிறது.

முழுக்க முழுக்க நகைச்சுவை, பேமிலி என்டர்டைன்மென்ட் கமர்ஷியல் படமாக உருவாக்குகிறார்கள். கதாநாயகி, மற்ற நட்சத்திரங்கள் , தலைப்பு ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தயாரிப்பாளர்கள் கேஎஸ் சீனிவாசன், கேஎஸ் சிவராமன் தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

வாசன் பிரதர்ஸ் - சிவஸ்ரீ பிக்சர்ஸ் - வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் 60 ஆண்டுகளாக படத் தயாரிப்பில் இருந்து வருகிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள். தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் 'ஒரு பக்க கதை' படத்தையும் தயாரித்துக் கொண்டுள்ளனர்.

English summary
Santhanam has signed a new movie for Vasan Visual Ventures as hero.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil