»   »  அவருக்கு ஒர்க்அவுட்டாச்சு, எனக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது.. இப்படி ஆயிருமோ சந்தானம் நிலை?

அவருக்கு ஒர்க்அவுட்டாச்சு, எனக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது.. இப்படி ஆயிருமோ சந்தானம் நிலை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவான சந்தானம் சிக்ஸ் பேக்ஸ் வைக்க முடிவு செய்துள்ளாராம்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் சந்தானம். காமெடியில் கலக்கி வரும் அவருக்கும் ஒரு நாள் ஹீரோவாகும் ஆசை வந்தது. அந்த ஆசை நிறைவேறவும் செய்தது.

அவரை காமெடி பீஸாக பார்த்து பழகிய மக்கள் அவரை ஹீரோவாகவும் ஏற்றுக் கொண்டனர்.

தில்லுக்கு துட்டு

தில்லுக்கு துட்டு

காமெடியை கூட வித்தியாசமாக செய்யும் சந்தானம் தனது தில்லுக்கு துட்டு படம் வெற்றி அடைந்ததை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளார். பிற ஹீரோக்களுக்கு நிகராக அவரது படமும் ஓடுகிறது.

சந்தானம்

சந்தானம்

பிற ஹீரோக்களுக்கு நிகராக தனது படமும் ஓடுவது சந்தானத்திற்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. தொடர்ந்து ஹீரோவாக நடிக்க விரும்பும் அவர் தனது உடல் மற்றும் நடிப்பில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.

சிக்ஸ் பேக்

சிக்ஸ் பேக்

சந்தானம் சிக்ஸ் பேக் வைக்கப் போகிறாராம். மேலும் தனது படத்தில் ஆக்ஷனை தூக்கலாக வைத்து நடனத்திலும் கவனம் செலுத்த உள்ளாராம். இனி வேகமாக

நடனமாடுவது என்று தீர்மானித்துள்ளார்.

முன்மாதிரி

முன்மாதிரி

தெலுங்கு நடிகர் சுனில் காமெடியனாக இருந்து ஹீரோவானார். அவர் சிக்ஸ் பேக் வைத்து ஆக்ஷனில் குதித்துள்ளார். அவரை முன்மாதிரியாக வைத்து சிக்ஸ் பேக் கோதாவில் இறங்க உள்ளார் சந்தானம்.

கோலிவுட்

கோலிவுட்

சந்தானம் சிக்ஸ் பேக் வைப்பதை கோலிவுட்டில் சிலர் வரவேற்றுள்ளனர். சிலரோ சிக்ஸ் பேக் சரி, அது சந்தானத்திற்கு செட்டாகுமா என்று இப்போதே விமர்சிக்கத் துவங்கிவிட்டனர்.

English summary
Comedian turned hero Santhanam has decided to sport six pack. He is going to concentrate on action and dance too.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil